லிட்ரோ நிறுவனத் தலைவர் பதவி விலகல்!
லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.
எரிவாயு தட்டுப்பாடு இல்லை..
கடிதம் மூலம் இந்த பதவி விலகலை அவர் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரை எரிவாயு தட்டுப்பாடு இருக்காது என்றும் முதித பீரிஸ் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதேவேளை, கடந்த 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி காலகட்டத்தில், எரிவாயு கொள்வனவு தொடர்பான சர்ச்சைகள் ஏற்பட்டபோது இதற்கு முன்னர் லிட்ரோ நிறுவனத்தின் தலைவராக இருந்தவர் அந்த பதவியில் இருந்து விலகிச் சென்றிருந்தார்.
அதனையடுத்து குறித்த பதவிக்கு, 2022 ஜூன் 13ஆம் திகதி முதித பீரிஸ் தெரிவானார்.
மேலும், அதற்கு முன்னர் லிட்ரோ நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளராக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்: அடுத்த 48 நாட்கள் என்ன நடக்கும்? டால்பின்களின் வரவேற்பு வீடியோ News Lankasri

7 அறைகள் முதல் உடற்பயிற்சி கூடம் வரை.., சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள வசதிகள் என்னென்ன? News Lankasri

Super Singer: பாதியில் பாடலை நிறுத்திய சிறுமி.... அதிருப்தியில் அரங்கம்! நடுவர்களின் முடிவு என்ன? Manithan
