இலாப வருமானத்தை திறைசேரிக்கு செலுத்திய லிட்ரோ நிறுவனம்
மூன்று பில்லியன் ரூபாய் இலாப வருமானத்தை திறைசேரிக்கு செலுத்தியுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள லிட்ரோ நிறுவனத்தின் காரியாலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

லிட்ரோ நிறுவனத்தின் நிதி நெருக்கடி
பாரிய நிதி நெருக்கடியை எதிர்கொண்டிருந்த லிட்ரோ நிறுவனம் தற்போது இலாபமடைந்துள்ளது.
2023ஆம் ஆண்டு காலப்பகுதியில் லிட்ரோ நிறுவனம் ஸ்ரீ லங்கா காப்புறுதி கூட்டுத்தாபனத்துக்கு 1.5 பில்லியன் ரூபாய் இலாப வருமானத்தை செலுத்தியுள்ளோம்.
தற்போது 1.5 பில்லியன் ரூபாய் இலாப வருமானத்தை ஸ்ரீ லங்கா காப்புறுதி கூட்டுத்தாபனம் ஊடாக திறைசேரிக்கு செலுத்தியுள்ளோம்.

லிட்ரோ நிறுவனத்தின் தலைவராக பதவியேற்கும்போது நிறுவனம் பாரிய நிதி நெருக்கடியை எதிர்கொண்டிருந்தது. முறையான முகாமைத்துவம் மற்றும் ஊழியர்களின் ஒத்துழைப்பு ஆகியவற்றின் ஊடாக நிறுவனம் தற்போது இலாபமடைந்துள்ளது.
லிட்ரோ நிறுவனத்தின் எரிவாயு சிலிண்டரின் பாதுகாப்புத் தன்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
77 பந்தில் சதமடித்த 22 வயது வீராங்கனை! உலகக்கிண்ண அரையிறுதியில் சாதனை..திணறும் இந்திய அணி News Lankasri
சீனாவில் இருந்து அரிய பூமி கனிமங்களை இறக்குமதி செய்ய உரிமம் பெற்றுள்ள இந்திய நிறுவனங்கள் News Lankasri