இலக்கிய விழா 2023: நிகழ்வுக்கான இலக்கிய போட்டிகள் ஆரம்பம்
இலக்கிய விழா - 2023 நிகழ்ச்சி திட்டத்தின் ஒரு பகுதியாக இலக்கியப் படைப்பாளர்களிடையே போட்டிகளை நடத்துவதற்கான அறிவிப்புக்கள் வெளியாகியுள்ளன.
ஆண்டுதோறும் இத்தகைய கலை இலக்கிய விழாக்களும் போட்டிகளும் நடத்தப்படும். பிரதேச மட்டப்போட்டிகளைத் தொடர்ந்து அவற்றில் வெற்றி பெற்ற படைப்பாளர்களின் படைப்புகள் மாவட்ட மட்டப் போட்டிகளுக்காக அனுப்பி வைக்கப்படும்.
மாவட்ட மட்டத்தில் வெற்றி பெற்ற படைப்புகள் தேசியமட்டப் போட்டிகளுக்காக அனுப்பி வைக்கப்படும்.
அப்போட்டிகளில் வெற்றி பெற்ற படைப்புக்கள் மற்றும் படைப்பாளிகளுக்கு சான்றிதழ் வழங்கி பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கரைதுறைபற்று பிரதேச செயலகத்தால் கடிதங்கள் அனுப்பி வைப்பு
கரைத்துறைபற்று பிரதேச செயலகத்தினால் பிரதேச மட்டப் போட்டிகளில் கலந்துகொள்வதற்கான தகவல் தெரிவிப்பு கடிதங்கள் பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட கலைஞர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் அத்தகைய போட்டிகளில் கலந்துகொள்வதற்கான அறிவுறுத்தல்கள் மற்றும் விண்ணப்பப் படிவம் இணைக்கப்பட்ட கடிதம் ஒன்று தனக்கு நேற்று (30..2023) கிடைக்கப் பெற்றதாகவும் கவிஞரும் எழுத்தாளருமான கவிஞர் நதுநசி தெரிவித்தார்.
போட்டிகளில் கலந்துகொள்ளும் ஆர்வமுள்ள கலைஞர்கள் மற்றும் படைப்பாளர்கள் தாங்கள் வசிக்கும் பிரதேசங்களுக்கான பிரதேச செயலகங்களின் கலாச்சார உத்தியோகத்தரை அணுகி மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் இதனால் போட்டிகளில் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி சான்றுகளை பெற இந்த முயற்சி உதவியாக இருக்கும் என்றும் வேண்டுகோள் விடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.
படைப்புக்கள் மூலம் சமூகத்திற்கு சொல்வது என்ன?
ஒவ்வொரு படைப்பாளியும் தன் படைப்புகள் ஊடாக சமூகத்திற்கு சொல்ல முனையும் கருத்துக்கள் புள்ளியிடலில் நோக்கப்படும் விடயங்களில் ஒன்றாக இருப்பது வரவேற்கத்தக்கது.
நின்று நிலைக்கும் நல்ல கருத்துக்களை தொடர்ந்து சமூகத்திற்கு கிடைக்கச் செய்யும் வழிகளில் இலக்கிய நூல்களின் பங்கு அளப்பரியது.சிறந்த நீதி நூலாக திருக்குறள் பயன்படுத்தப்படுகின்றமையை எடுத்துக்காட்டலாம்.
6 வயது முதல் 18 வயது வரையான வயதினரும் அதற்கு மேற்பட்டோர் திறந்த பிரிவாகவும் போட்டிகளில் இணைத்துக் கொள்ளப்படுதலால் இளையவர்களிடையே சமூகம் மீதான அக்கறையை ஏற்படுத்தி விடும் களமாக இம்முறை இலக்கியப் போட்டிகள் - 2023 அமைந்துள்ளமை வரவேற்கத்தக்கது.

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan
