உலகின் சக்திவாய்ந்த பெண்களின் பட்டியலில் நிர்மலா சீதாராமன்
உலக அளவில் மிகவும் சக்தி வாய்ந்த 100 பெண்கள் கொண்ட பட்டியலில் இந்தியாவின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடம்பிடித்துள்ளார்.
ஆண்டுதோறும் அமெரிக்காவின் போர்ப்ஸ் இதழ் இந்த பட்டியலை வெளியிட்டு வருகிறது.
இந்த பட்டியலானது செல்வம், ஊடகம், தாக்கம் மற்றும் செல்வாக்கு ஆகிய 4 துறைகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
மிகவும் சக்திவாய்ந்த பெண்
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பட்டியலை போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், உலக அளவில் மிகவும் சக்திவாய்ந்த பெண்ணாக ஐரோப்பிய ஒன்றிய தலைவர் ஊர்சுலா வாண்டர் லியன் முதலிடத்தை பிடித்துள்ளார்.
மேலும், ஐரோப்பிய மத்திய வங்கி தலைவர் கிறிஸ்டின் லகார்ட் 2ஆம் இடத்தையும், அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
இந்த பட்டியலில் இந்தியாவின் சார்பில் 4 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில்,இந்தியாவின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 32ஆவது இடத்தை பிடித்துள்ளார்.
தொடர்ந்து 4 ஆண்டுகளாக இந்தப் பட்டியலில் இடம்பிடித்து வரும் அவர் 5 ஆவது முறையாக இந்த ஆண்டும் தனது இடத்தை உறுதி செய்துள்ளார்.

முள்ளிவாய்க்காலில் இறுதிப் போரில் தொலைந்த மோட்டார் சைக்கிள் 14 ஆண்டுகளுக்கு பின் மீட்பு: உரிமையாளருக்கு ஏற்பட்டுள்ள பரிதாபநிலை
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





10 போர் விமானங்களை புவேர்ட்டோ ரிக்கோவிற்கு அனுப்பும் டிரம்ப் - அதிகரிக்கும் போர் பதற்றம் News Lankasri

மண்டபத்தில் சக்தி செய்த பிரச்சனை, ஜீவானந்தம் கேட்ட கேள்வி, குழப்பத்தில் ஜனனி.. எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
