பிரான்ஸின் கட்டாய தனிமைப்படுத்தல் நாடுகளின் பட்டியலில் மேலும் சில நாடுகள் சேர்ப்பு!
கோவிட்-19 கட்டாய தனிமைப்படுத்தல் நாடுகளின் பட்டியலில், மேலும் மூன்று நாடுகளை பிரான்ஸ் சேர்த்துள்ளது.
இதன்படி ரஷ்யா, நமீபியா மற்றும் சீஷெல்ஸ் ஆகிய நாடுகள் கட்டாய தனிமைப்படுத்தல் நாடுகளின் பட்டியலில் புதிதாக இணைக்கப்பட்டுள்ளது.
குறித்த மூன்று நாடுகளிலும் புது வகை திரிபு கோவிட் வைரஸ் தொற்று பரவி வருவதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதுடன்,அந்த நாடுகளிலிருந்து வருவோர் 72 மணிநேரங்களுக்கு உட்பட்ட பி.சி.ஆர். எதிர்மறை முடிவுகளோடும், கட்டாயமாக 10 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கும் உட்படுத்தப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பிரான்ஸ், இலங்கை, இந்தியா, பிரேஸில், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருவோரை கட்டாய தனிமைப்படுத்தல் நாடுகளின் பட்டியலில் இணைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
