அனுமதி சட்டங்களை மீறி இயங்கிய மதுபானசாலைக்கு சீல்
பொகவந்தலாவ டின்சின் பகுதியில் அனுமதி சட்டங்களை மீறி இயங்கி வந்த மதுபானசாலை ஒன்றுக்கு கலால் திணைக்கள அதிகாரிகளினால் சீல் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த மதுபானசாலையில் நீண்டகாலமாக மதுபான வகைகளை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக கண்டி விசேட கலால் திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த மதுபானசாலைக்கு சென்ற மேற்படி கலால் திணைக்கள அதிகாரிகள் ஒரு மதுபான போத்தலும், ஒரு பியர் போத்தலும் கொள்வனவு செய்த போது இவர்கள் அதிக விலைக்கு விற்பனை செய்தமையை கண்டறிந்துள்ளனர்.
மேலதிக விசாரணை
பின்னர், இது தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்த அதிகாரிகள் குறித்த மதுபானசாலைக்கு சீல் வைத்தனர்.
இதன்போது இதற்கான தண்டப்பணத்தை செலுத்தும் வரை குறித்த மதுபானசாலையினை மீண்டும் திறக்க முடியாது எனவும், கலால் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கண்டி மற்றும் ஹட்டன் கலால் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



