நாடளாவிய ரீதியில் சகல மதுபான சாலைகளுக்கும் பூட்டு
வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து உரிமம் பெற்ற மதுபான கடைகள் மற்றும் மதுபான விற்பனை நிலையங்கள் இன்று (04.05.2023) முதல் மூன்று நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது.
இதன்படி, மே 04, 05, 06 ஆகிய மூன்று நாட்களுக்கு அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த காலப்பகுதியில் மூடத்தவறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த திணைக்களம் மேலும் எச்சரித்துள்ளது.
இருப்பினும், 05, 06, 07 ஆகிய மூன்று நாட்கள் மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்படும் என மாறுப்பட்ட தகவல் வெளியான நிலையில், 04, 05, 06 ஆகிய மூன்று நாட்களே மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.





அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri

உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri

ரவி மோகன் பேசியதை கேட்டு கெனிஷா கண்ணீர்.. சொத்துக்கள் முடக்கம், பிரச்சனைகள் பற்றி எமோஷ்னல் Cineulagam

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 2 ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
