இலங்கையில் மூடப்படும் மதுபான விற்பனை நிலையங்கள்! வெளியான அறிவிப்பு
நாட்டிலுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படுவது தொடர்பான அறிவிப்பொன்றை கலால்வரி திணைக்களம் வெளியிட்டுள்ளது.
அதன்படி தமிழ் - சிங்கள புதுவருடப் பிறப்பை முன்னிட்டு நாளையும் (13), நாளை மறுதினமும் (14) நாட்டிலுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படவுள்ளன.
இதேவேளை சட்டவிரோத மதுபான விற்பனை தொடர்பில் சுற்றிவளைப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கலால்வரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
சுற்றிவளைப்புகள்
எதிர்வரும் 31ஆம் திகதி வரை இந்த சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், 1913 என்ற துரித தொலைபேசி இலக்கத்தினூடாக சட்டவிரோத மதுபான விற்பனை மற்றும் தயாரிப்பு தொடர்பில் தகவல் வழங்க முடியும் என கலால்வரி திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.