மூடப்படும் மதுபானசாலைகள் - வெளியான அறிவிப்பு
எதிர்வரும் மே மாதத்தில் மூன்று நாட்கள் நாட்டின் அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.
சர்வதேச தொழிலாளர் தினம் மற்றும் வைகாசி (வெசாக்) விசாக பூரணையை முன்னிட்டு இவ்வாறு மதுபான சாலைகளை மூட தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள விசேட தினங்களைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மதுபான சாலைகள் மூடப்படும் தினங்கள்
அந்த வகையில், மே 01 (வெள்ளிக்கிழமை): சர்வதேச தொழிலாளர் தினம் (மே தினம்), மே 30 (சனிக்கிழமை): வைகாசி (வெசாக்) விசாக பூரணை தினம் மற்றும் மே 31 (ஞாயிற்றுக்கிழமை): வைகாசி விசாக பூரணைக்கு அடுத்த நாள் இவ்வாறு மதுபான சாலைகள் மூடப்படவுள்ளன.

மகாநாயக்க தேரர்களின் கோரிக்கைக்கு இணங்க, இந்த ஆண்டு வைகாசி விசாக பூரணைதினம் மே 30ஆம் திகதி அனுசரிக்கப்படவுள்ளதுடன், அதற்கு அடுத்த நாளான மே 31ஆம் திகதி பொது விடுமுறை தினமாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மே 27 முதல் ஜூன் 02 வரை தேசிய வெசாக் வாரமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 15 மணி நேரம் முன்
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri