ஊரடங்கு மத்தியிலும் மதுபானம் விற்பனை – ஒருவர் கைது
கோவிட் வைரசின் அச்சம் காரணமாகத் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், நுவரெலியா பொரகஸ் பகுதியில் வீடொன்றில் சட்டத்துக்குப் புறம்பாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
அவரிடமிருந்து 124 மதுபானம் போத்தல்கள் கைப்பற்றப்பட்டன. நுவரெலியா பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நுவரெலியா மதுவரி திணைக்கள அதிகாரிகளுடன் இணைந்து இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கோவிட் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில் மதுபான சாலைகளும் மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சட்டத்துக்குப் புறம்பாகவும் அதிக விலையிலும் மதுபானம் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நுவரெலியா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மதுவரி திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

அடம்பிடித்த அன்புக்கரிசி.. தயங்கி நிற்கும் அக்கா பாசம்- பேசாமல் ஒதுங்கிய குணசேகரன் குடும்பம் Manithan

குணசேகரன் தலைமையிலேயே பார்கவி-தர்ஷன் திருமணத்தை நடத்தும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது தெறி எபிசோட் புரொமோ Cineulagam
