மன்னாரில் நீண்ட வரிசையில் காத்திருந்த மதுப்பிரியர்கள்
நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் தொற்று காரணமாக சுமார் ஒரு மாதம் நாட்டில் பயணத்தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று திங்கட்கிழமை (21) காலை பயணத்தடை தளர்த்தப்பட்டது.
இந்த நிலையில் நாட்டில் உள்ள மது விற்பனை நிலையங்கள் இன்று காலை முதல் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக திறக்க அனுமதி வழங்கப்பட்டது.
அதற்கு அமைவாக மன்னாரில் உள்ள மது விற்பனை நிலையமும் சுகாதார நடை முறைகளுக்கு அமைவாக திறக்கப்பட்டது.
ஆரம்பத்தில் பல நூற்றுக்கணக்கானவர்கள் சுகாதார நடை முறைகளை மீறி மதுபான பொருட்களை கொள்வனவு செய்ய கூட்டம் கூடினர்.
இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சுகாதார நடை முறைகளுக்கு அமைவாக மதுபானம் கொள்வனவு செய்ய நடவடிக்கைளை மேற்கொண்டனர்.
சுகாதார நடைமுறைகளை பின்பற்றி முகக்கவசம் அணிந்து சமூக இடை வெளியை கடை பிடித்து மதுபானம் கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் இடம்பெற்றன. நீண்ட வரிசையில் நின்று மதுப்பிரியர்கள் மது பான பொருட்களை கொள்வனவு செய்தமையும் குறிப்பிடத்தக்கது.









உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
