சுற்றுலா சபையின் அனுமதி பெற்ற ஹோட்டல்களுக்கு வழங்கப்பட்டுள்ள மதுபான விற்பனை அனுமதிப்பத்திரம்
2021ம் ஆண்டு 150 மதுபான விற்பனைக்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக கலால் வரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சுற்றுலா சபையின் அனுமதியைப் பெற்ற ஹோட்டல்கள் மற்றும் விடுதிகளுக்கே அதிகளவிலான அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த வருடம் பல்பொருள் அங்காடிகளுக்கு 69 அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டதாக மதுவரி ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி தெரிவித்துள்ளார்.
எனினும், 2015ம் ஆண்டுக்கு பின்னரான காலப் பகுதியில், நகரங்களில் மதுபானசாலைகளை ஆரம்பிப்பதற்கான ஒரு அனுமதிப் பத்திரமேனும் வழங்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மதுபான விற்பனை நிலையங்களில் மதுபான போத்தல்களில் ஸ்டிக்கர்கள் அல்லது டிஜிட்டல் அடையாளங்கள் ஒட்டும் நடவடிக்கை அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.



