மதுபான அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்
இலங்கையில் காணப்படும் ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள், விருந்தினர் விடுதிகள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு உணவளிக்கும் உணவு விடுதிகள் ஆகியவற்றுக்கு மதுபான உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளது என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “நிதி அமைச்சின் சுற்றறிக்கையின்படி இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் (SLTDA) அனைத்து அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களுக்கும் மதுபான அனுமதிப்பத்திரங்கள் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு வழங்கப்பட்டுள்ளன.
மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கல்
மதுவரி கட்டளை சட்டத்தின்படி சில நிபந்தனைகளின் கீழ் இந்த சுற்றுலா ஹோட்டல்களுக்கு ஜூலை 28 முதல் மென்மையான மதுபானங்களை விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இந்த உரிமங்களுக்காக வணிகங்களின் உரிமையாளர்கள் 25,000 ரூபாவை செலுத்தப்பட வேண்டும்.
இதற்கமைய அமைச்சரவை தீர்மானத்தை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பது மற்றும் நாட்டிற்கு வெளிநாட்டு வருவாயை கொண்டு வருவதை நோக்கமாக கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. என தெரிவித்துள்ளார்.
நட்சத்திர ஹோட்டல்களில் தங்கியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் - பொலிஸார் நடவடிக்கை |