சஜித் கட்சியில் யாரும் எஞ்சமாட்டார்கள்: ரஞ்சித் சியம்பலாபிட்டிய
மதுபான விற்பனை அனுமதிப்பத்திரத்திற்காக விண்ணப்பித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை தண்டிக்க முனைந்தால், ஐக்கிய மக்கள் சக்தியில் யாரும் எஞ்சி இருக்க மாட்டார்கள் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய ( Ranjith Siyambalapitiya) சாடியுள்ளார்.
மதுபான விற்பனை அனுமதிப்பத்திரம் பெற்றுள்ள மற்றும் அதற்காக விண்ணப்பித்துள்ள தனது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தண்டிக்கப் போவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அதற்குப் பதிலளிக்கும் வகையில் அவர் ஊடகங்களுக்கு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மதுபான விற்பனை அனுமதிப்பத்திரம்
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“தற்போதைய அரசாங்கம் நண்பர்களுக்கு அல்லது ஆதரவாளர்களுக்கு மதுபான விற்பனை அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான எந்தவொரு செயற்பாட்டையும் மேற்கொள்ளவில்லை.
அதே நேரம் 2018 ஆம் ஆண்டில் சனத்தொகையின் விகிதத்துக்கு ஏற்ப கணக்கிடப்பட்டு மதுபான விற்பனைச் சாலைகளுக்கான அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டது. அதன் பின்னர் இன்று வரை மதுபான விற்பனை அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படவில்லை.
எனவே தற்போதைய சனத்தொகை விகிதத்துக்கு ஏற்ப புதிதாக மதுபான விற்பனை அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட வேண்டு்ம். அதன் மூலமாகவே சட்டவிரோத மதுபானத்தை ஒழிக்க முடியும்” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |