கிளிநொச்சியில் உணவகத்துடன் கூடிய மதுபானசாலை: மக்கள் எதிர்ப்பு (Video)
கிளிநொச்சி - முழங்காவில் பகுதியில் உணவகத்துடன் கூடிய மதுபானசாலை அமைப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி - முழங்காவில் இரணைமாதா நகர்ப்பகுதியில் கடற்றொழில் குடும்பங்கள் செறிந்து வாழும் மையப்பகுதியில் உணவகத்துடன் கூடிய மதுபானசாலை ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதனை தமது பகுதியில் அமைக்க வேண்டாம் எனப் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
பல்வேறு வகையான பாதிப்புகள்
குறித்த பகுதியில் மதுபானசாலை அமையுமானால் தமது பிரதேசத்தில் பல்வேறு வகையான பாதிப்புகள் ஏற்படும் என்றும் இது தொடர்பில் பொது அமைப்புக்கள் மீனவ சங்கம் என்பது இணைந்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது.
மேலும், இது தொடர்பாகப் பிரதேச செயலாளர் பொலிஸார் மற்றும் உரிய அதிகாரிகளுக்கு மகஜர்களையும் வழங்கியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |