ஆயுத குழுக்களுடன் தொடர்பு-இரு பெண்கள் உட்பட 10 பேர் கைது
இரு ஆயுத குழுக்களுடன் தொடர்புடைய இரண்டு பெண்கள் உட்பட 10 பேர், பல கூரிய ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றப்பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்களுடன் இரண்டு வாள்கள், வெட்டுக்கத்திகள், இரண்டு கினிஸ் கத்திகள், 6 இரும்பு பொல்லுகள், மூன்று ஹொக்கி மட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கொழும்பு நகரின் பொரள்ளை கித்துல்வத்த, நாராஹென்பிட்டி மெனிங் டவுன் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யுவதி ஒருவரை அடிப்படையாக கொண்டு இந்த பிரதேசங்களை சேர்ந்த இரண்டு தரப்பினருக்கு இடையில் சுமார் இரண்டு ஆண்டுகளாக மோதல்கள் இருந்து வந்துள்ளன.
தற்போது போதைப் பொருள் விற்பனையை அடிப்படையாக கொண்டு மோதல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களில் கொலையுடன் சம்பந்தப்பட்ட சந்தேக நபர் ஒருவரும் இருப்பதாக பொலிஸார் கூறியுள்ளனர்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 7 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
