கடும் எரிபொருள் நெருக்கடி - மட்டுப்படுத்தப்படும் சில அரச சேவைகள்
அனைத்து பிரதேச செயலகங்களின் மாவட்டப் பதிவாளரினால் வழங்கப்பட்ட இறப்பு மற்றும் பிறப்பு மற்றும் திருமண சான்றிதழ்களின் பிரதிகள் திங்கள் மற்றும் புதன்கிழமைகளில் மட்டும் 2 நாட்களுக்குள் வழங்கப்படும்.
காலை 8.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை இந்த சேவை முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் பத்தரமுல்லை சுஹுருபாய கிளையின் மாவட்டப் பதிவாளர் பிரிவு குருநாகல், கண்டி மற்றும் மாத்தறை குடிவரவு மற்றும் குடியகல்வுக் கிளை அலுவலகங்களின் பிரதேச செயலகங்கள் வாரத்தில் ஐந்து நாட்களிலும் உரிய சேவைகளுக்காகச் செயற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஜூலை 10ம் திகதி வரை ஒவ்வொரு வாரமும் செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் மட்டும் அனைத்து தபால் அலுவலகங்கள் மற்றும் துணை தபால் நிலையங்கள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரட்ன இதனை தெரிவித்துள்ளார்.
செவ்வாய், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மட்டும் தபால் சேவை வழங்கப்பட உள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பணியாளர்களுக்கு போக்குவரத்தில் ஈடுபடுவதில் ஏற்பட்டுள்ள சிரமங்கள் மற்றும் தபால் பொதிகளை போக்குவரத்து செய்வதில் ஏற்பட்டுள்ள சிரமங்கள் என்பனவற்றினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாட்டின் பல்வேறு நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam