கிளிநொச்சியில் மட்டுப்படுத்தப்பட்ட குடிநீர் விநியோகம்: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் கிளிநொச்சி - கிராஞ்சி குடிநீர் திட்டத்தின் கீழ் விநியோகிப்படுகின்ற குழாய் வழி குடிநீரானது மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வழங்கப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தகவல் வெளியிட்டுள்ளது.
கடும் வெப்பமான காலநிலை
நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக நீர் மூலத்திலிருந்து தொடர்ச்சியாக நீரை பெற்றுக்கொள்வதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் கிராஞ்சி குடி நீர் விநியோக திட்டத்தின் கீழ் குழாய் வழி நீர் விநியோகிப்படுகின்ற கிராஞ்சி, வலைப்பாடு, பொன்னாவெளி பிரதேசங்களில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் குடிநீர் விநியோக்கப்படும் என அறிவித்துள்ளனர்.

எனவே பொது
மக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் தேசிய நீர் வழங்கல்
வடிகாலமைப்புச் சபையினர் அறிவித்துள்ளனர்.
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 22 மணி நேரம் முன்
4 நாட்களில் உலகளவில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
ஓமான் குறுக்கிட்டால் மொத்தமாக அழிப்போம்... ஈரான் போர் தொடர்பில் ட்ரம்ப் பகிரங்க மிரட்டல் News Lankasri