திருமணம் மற்றும் இறுதி சடங்கு நிகழ்வுகளில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கையை வரையறுக்க தீர்மானம்?
திருமண நிகழ்வுகள், மரண சடங்குகள் உள்ளிட்ட நிகழ்வுகளில் கலந்துக்கொள்வோரின் எண்ணிக்கையை வரையறுப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் தொற்று தடுப்புக்கான இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே இதனை தெரிவிக்கின்றார்.
இவ்வாறான நிகழ்வுகளில் கலந்துக்கொள்வோர் தொடர்பில் இதற்கு முன்னர் பின்பற்றப்பட்ட சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்டத்தை அமல்படுத்துமாறு கோரிக்கை முன்வைக்கப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெறவுள்ள கோவிட் கட்டுப்பாடு தொடர்பான ஜனாதிபதி பணிக்குழுவின் கூட்டத்தில் இந்த கோரிக்கை முன்வைக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், கோவிட் வைரஸைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக பல முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri