பொதுநலவாய நாடுகள் இளைஞர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள இலங்கையர் (Photos)
பொதுநலவாய நாடுகள் இளைஞர் விருதுக்கு இலங்கையர் ஒருவரின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
2022ம் ஆண்டுக்கான பொதுநலவாய நாடுகள் இளைஞர் விருதிற்காக 17 நாடுகளைச் சேர்ந்த 20 பேரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
கண்டுபிடிப்பாளர்கள், செயற்பாட்டாளர்கள், முயற்சியான்மையாளர்கள் உள்ளிட்ட இளம் திறமையாளர்கள் இவ்வாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். இந்த விருதிற்காக ஆசிய நாடுகளைச் சேர்ந்த நான்கு பேரின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த லிலான் தயானந்த என்ற இளைஞரின் பெயரும் இந்த விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இயற்கை விவசாயத்தின் மூலம் விளைச்சலை அதிகரிப்பது குறித்த ஆய்வுகளை நடாத்தி விவசாயிகளுக்கு பல்வேறு வழிகளில் லிலான் உதவி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
காலநிலை மாற்றம், பூச்சிகளினால் ஏற்படக்கூடிய அபாயங்கள் உள்ளிட்ட பல்வேறு சவால்களை வெற்றிகொள்வதற்கான தீர்வு திட்டங்களை லிலான் வழங்கி வருகின்றார்.
நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இயற்கை விவசாயத்தில் வெற்றிகொள்வதற்கு லிலான் வழங்கி வரும் பங்களிப்பினை பாராட்டும் வகையில் இந்த விருதிற்காக அவரது பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.





