என்ஜின் இல்லாத வாகனத்துக்கு டயர் வாங்குவது போன்ற பாதீடு: இம்ரான்

People Basil Rajapaksa Budget Imran Mahroof
By Independent Writer Nov 16, 2021 06:12 PM GMT
Report

என்ஜின் இல்லாத வாகனத்துக்கு டயர் வாங்குவது போன்று பாதீட்டைத் தயாரித்துள்ளார்கள், முச்சக்கரவண்டி சாரதிக்கு 62 ரூபாய் நிவாரணமே இந்த பாதீட்டின் மூலம் வழங்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற வரவு செலவு திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

இலங்கை மக்களின் குரல் வலைகள் நசுக்கப்பட்டு அவர்கள் சுவாசிக்கவே கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த வேளையில், இந்த பாதீட்டின் மூலம் சுவாசிக்கச் செயற்கை சுவாசமாவது வழங்குவார்கள் என மக்கள் எதிர்பார்த்திருந்த வேளை உங்களுக்குச் செயற்கை சுவாசம் கூட நாங்கள் வழங்க மாட்டோம் என பசில் ராஜபக்ச மக்களுக்குக் கூறி உள்ளார்.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச நாடாளுமன்றத்துக்கு வரும் முன் அவருக்கு ஏழு அறிவு உள்ளது. அவர் மக்களுக்கு நிவாரணம் வழங்குவார், எரிபொருள் விலை குறைப்பார் என்று பல கதைகள் சொன்னார்கள். எனக்கு தெரிந்து விஞ்ஞான ரீதியில் மனிதர்கள் யாருக்கும் ஏழு அறிவு இல்லை.

ஆனால் ஏழு அறிவு உள்ளவர் எனச் சொன்னவர்களுக்குக் கணித ரீதியில் ஒன்றைக் கூறிக்கொள்ள முடியும். நீங்கள் கூறுவதை வைத்துப் பார்க்கும் போது உங்களை விட பசில் ராஜபக்சவுக்கு ஒரு அறிவு அதிகம். ஆறு அறிவுள்ள பசிலை விட ஒரு அறிவு குறைந்த உங்களை நாங்கள் எவ்வாறு அழைப்பது.

இந்த பாதீட்டை எடுத்து நோக்கினால் கிழவி ஒருவரை அலங்கரித்து மணப்பெண்ணாக்கும் கதைதான் நடைபெற்றுள்ளது. விவசாயிகளின் பசளை பிரச்சினைக்குத் தீர்வு முன்வைக்கப்பட்டுள்ளதா? இல்லை. அரிசி மாபியாவை ஒழித்து அரிசியின் விலையை அரசால் தீர்மானிக்கத் தீர்வு முன்வைக்கப்பட்டுள்ளதா? இல்லை. கேஸ் தட்டுப்பாட்டுக்குத் தீர்வு முன்வைக்கப்பட்டுள்ளதா? இல்லை.

பால்மா தட்டுப்பாட்டுக்குத் தீர்வு முன்வைக்கப்பட்டுள்ளதா? இல்லை. அடுத்த ஆண்டில் ஏற்படப்போகும் டொலர் தட்டுப்பாட்டுக்குத் தீர்வு முன்வைக்கப்பட்டுள்ளதா? இல்லை. அரச ஊழியர்களுக்குச் சம்பள அதிகரிப்பு உள்ளதா ?இல்லை. சமுர்த்தி பெரும் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதா? இல்லை. மலையக மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதா?இல்லை, ஆனால் என்ன செய்துள்ளார்கள்.

என்ஜின் இல்லாத வாகனத்துக்கு டயர் வாங்குவது போன்று பாதீட்டைத் தயாரித்துள்ளார்கள். முச்சக்கரவண்டி ஓட்டுநர்களுக்கு நிவாரணம் வழங்க 600 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சுமார் 10 இலட்சம் முச்சக்கர வண்டிகள் உள்ளதாகப் புள்ளிவிவரம் கூறுகிறது.

அதில் சுயபாவனை, பழுதடைந்தது என 2 இலட்சத்தைக் கழித்துப் பார்த்தால் சுமார் 8 இலட்சம் முச்சக்கரவண்டி சாரதிகள் இருப்பர். அப்படி பார்க்கப்போனால் ஒரு சாரதிக்கு வருடத்துக்கு 750 ரூபாவே நிவாரணமாக வழங்கப்படவுள்ளது. மாதமொன்றுக்கு 62 ரூபாய்.

இதுபோல தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்க 1500 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சுமார் 19 ஆயிரம் தனியார் பேருந்துகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆகவே ஒரு தனியார் பேருந்து உரிமையாளருக்கு மாதம் ஒன்றுக்குக் கிடைக்கக்கூடிய நிவாரணம் சுமார் ஆறாயிரத்து ஐந்நூறு ரூபாய். அதுபோல பாடசாலை பேருந்து, வான் ஓட்டுநர்களுக்கு 400 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

சுமார் 40 ஆயிரம் பாடசாலை பேருந்து, வான் ஓட்டுநர்கள் உள்ளதாக புள்ளிவிபரம் கூறுகிறது. அப்படி பார்த்தால் ஒருவருக்கு மாதம் ஒன்றுக்கு 833 ரூபாய் இதுதான் நிதி அமைச்சர் வழங்கியுள்ள நிவாரணம் அவர்கள் ஒரு நாளைக்கான எரிபொருள் தேவைக்கும் இந்த பணம் போதாது.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு பற்றி நிதி அமைச்சர் தெரிவித்த கருத்து முழு அரச ஊழியர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தியுள்ளது. கோவிட் அனர்த்தத்தின் போது உயிரைப் பணயம் வைத்து மக்களைக் காப்பாற்றியது சுகாதாரத்துறை சார் அரச ஊழியர்களே. நாட்டில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு சூறாவளி என ஒவ்வொரு அனர்த்தத்தின் போதும் மக்களைக் காப்பாற்றியது இந்த அரச ஊழியர்கள்தான்.

ஆனால் நீங்கள் தகுதியில்லாதவர்களுக்கு வழங்கிய அரசியல் நியமனங்களே அதிக செலவினத்துக்குக் காரணம். அதற்கு சிறந்த உதாரணமே நீங்கள் தற்போது வழங்கிக் கொண்டிருக்கும் ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்கள். சமுர்த்தி பெறத் தகுதியானோர்க்கு வேலை தருகிறோம் எனப் பிரதேச செயலகங்கள் தோறும் நேர்முகத்தேர்வு நடாத்தி அந்த மக்களைப் பல நாட்கள் அங்கும் இங்கும் அலைய விட்டபின் நேர்முகத்தேர்விலேயே கலந்து கொள்ளாதவர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இதனால்தான் சுமை ஏற்படுகிறது. ஆகவே தியாகங்கள் செய்து அர்ப்பணிப்புடன் பணியாற்றும் அரச ஊழியர்களைச் சாதாரண தரம் சித்தியடையாத அமைச்சர்கள் விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அரசின் செலவினங்களைக் குறைக்க அமைச்சர்களினதும் அரச அதிகாரிகளினதும் செலவைக் குறைக்கிறோம் என கூறி மாதம் ஒன்றுக்கு ஐந்து லிற்றர் பெற்றோல் கொடுப்பனவைக் குறைக்கிறோம் என நிதி அமைச்சர் கூறுகிறார்.

யாரை ஏமாற்ற இந்த சிறுபிள்ளைத்தனமான குறைப்பு. அமைச்சர்களின் எரிபொருள் கொடுப்பனவைக் குறைத்தால் மாதம் ஒன்றுக்கு 350 லீற்றர் பெற்றோல் கொடுப்பனவே குறைக்க முடியும் இது வெறும் ஐம்பத்து ஐயாயிரம் மட்டுமே. ஆனால் உங்கள் அமைச்சர்களின் மாதம் ஒன்றுக்கான தேநீர் செலவு இலட்சங்களைத் தாண்டுகிறது.

ஏழு மூளை உள்ளவர்களின் செலவு குறைப்பு இப்படித்தான் இருக்கும் என நினைக்கிறேன். அத்துடன் கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் என்ற ரீதியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு அபிவிருத்திகளில் பின்தங்கியிருக்கும் வடக்கு கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு விசேட திட்டங்கள் எதையும் நான் காணவில்லை.

நல்லாட்சி அரசின் வரவு செலவு திட்டத்தில் வடக்கு கிழக்கு மாகாண மக்களின் மீள் குடியேற்றத்துக்கென நிதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. அரசுக்கு ஆதரவு அளிக்கும் வடக்கு கிழக்கு மாகாண தமிழ் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீங்கள் எப்படியும் இந்த வரவு செலவு திட்டத்துக்கு கையை உயர்த்துவார்கள் எனத்தெரியும். கையை உயர்த்த கடைசி இதையாவது கேட்டுப்பெற்ற பின்னர் கையை உயர்த்தலாமே எனத் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US