நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானத்தை தாக்கிய மின்னல்
பிரேசில்(Brazil) நாட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானமொன்றின் வால்பகுதியில் மின்னல் தாக்கும் காணொளியொன்று தற்போது இணையத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
பிரேசிலின் - பவுலோ நகரில் குவாருலோஸ் விமான நிலையத்தில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் பயணிகள் விமானம் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டு இருந்துள்ளது.
அப்போது, வானில் இருந்து மின்னல் ஒன்று விமானத்தின் வால் பகுதியை தாக்கியுள்ளது.இதனை விமான பயணியான பெர்ன்ஹார்டு வார் என்பவர் காணொளி எடுத்துள்ளார்.
காணொளி
இதுபற்றி பெர்ன்ஹார்டு வார் கூறும்போது,
பெரிய புயல் ஒன்று வீசியதால், விமானங்கள் தரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. நாங்களும் பாதுகாப்பான இடத்தில் அமர்ந்திருந்தோம்.
DRAMATIC moment lightning strikes tail of plane multiple times at São Paulo-Guarulhos Airport in Brazil pic.twitter.com/rZDnTA83Xt
— Avinash K S🇮🇳 (@AvinashKS14) January 25, 2025
இது புகைப்படம் எடுப்பதற்கான சரியான தருணம் என உணர்ந்தேன்.
அப்போது, நாங்கள் ஜன்னல் வழியே வெளியே பார்த்து கொண்டிருந்தபோது, விமான நிலைய தரை பகுதியருகே மின்னல் தாக்கியது.
அது விமான வால் பகுதியையும் தாக்கியபோது படம் பிடித்தேன் என தெரிவித்து உள்ளார்.
மின்னல் தாக்குதல்
இதுபற்றி அந்நாட்டு தேசிய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தியில், ஆண்டுக்கு சராசரியாக ஓரிரு முறை விமானம் மீது மின்னல் தாக்குதல் ஏற்படும்.
மின்னல் தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில் விமானம் வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டு உள்ளது. எனினும், மின்னல் தாக்கிய பின்னர், அந்த விமானம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், விமானத்தின் புறப்பட தாமதடைந்ததுடன் பயணிகளும் சரியான நேரத்தில் புறப்பட முடியாமல் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிப்பு சரிசெய்யப்பட்ட பிறகு 6 மணி நேரம் கழித்து விமானம் பயணத்திற்குப் புறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |