யாழில் பாடசாலை மாணவனை தாக்கிய மின்னல்
யாழ்ப்பாணம் - அராலி பகுதியில் மின்னல் தாக்கியதில் பாடசாலை மாணவன் ஒருவர் காயமடைந்துள்ளார்.
குறித்த, சம்பவம் நேற்றையதினம் (23.10.2024) இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் - அராலி மேற்கு பகுதியில், மாணவன் ஒருவன் பாடசாலையில் இருந்து வீட்டிற்கு வந்த பின்னர், இடி - மின்னலுடன் கூடிய வானிலை காணப்பட்ட வேளை வீட்டிற்கு வெளியே சென்றுள்ளார்.
அசம்பாவிதம் ஏற்படவில்லை
இதன்போது, அவர் மீது மின்னல் தாக்கிய நிலையில், வீட்டிற்குள் ஓடிச்சென்றுள்ளார். இதனையடுத்து, குறித்த மாணவன் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இதேவேளை, அராலி மேற்கு பகுதியில் உள்ள வீட்டின் மின் இணைப்பானது மின்னல் தாக்கத்தினால் திடீரென தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளது.
இதன்போது, விரைந்து செயற்பட்டு மின்சார இணைப்பினை தடை செய்த நிலையில், பாரிய அளவு அசம்பாவிதம் எவையும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அதிரடி காட்டிய அர்ஜுன் டெண்டுல்கர்: 153 ரன் விளாசிய கேரள வீரரின் விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தல் News Lankasri
பனிப்புயலில் சிக்கிய பல மாகாணங்கள்... போர்க்களமான சாலைகள்: 35 மில்லியன் மக்கள் பாதிப்பு News Lankasri