இங்கிலாந்தில் மன்மோகன் சிங்குக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிப்பு
இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்ற இந்திய மாணவர்களின் சாதனைகளை கௌரவிக்கும் வகையில் இந்த ஆண்டு இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உயரிய விருது பொருளாதாரம் மற்றும் அரசியல் வாழ்வில் ஆற்றிய பங்களிப்பிற்காக வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விருது கடந்த வாரம் லண்டனில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் அறிவிக்கப்பட்ட நிலையில் தேசிய இந்திய மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர் சங்கத்தால் விரைவில் டெல்லியில் மன்மோகன் சிங்கிடம் ஒப்படைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

கல்விக்கூட்டாண்மை
விருது குறித்து மன்மோகன் சிங் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
"நமது நாட்டின் எதிர்காலம் மற்றும் நமது இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் கீழ் இளைஞர்களிடம் இருந்து வரும் அர்த்தமுள்ள இந்த விருதை பெறுவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்தியா-இங்கிலாந்து உறவு உண்மையில் நமது கல்விக் கூட்டாண்மை மூலம் வரையறுக்கப்படுகின்றது.
 நமது தேசத்தை நிறுவிய மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், சர்தார் படேல் மற்றும் பலர் இங்கிலாந்தில் படித்து, சிறந்த தலைவர்களாக மாறினர். பல ஆண்டுகளாக எண்ணற்ற இந்திய மாணவர்கள் இங்கிலாந்தில் படிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்" என்று தெரிவித்துள்ளார். 
 
    
     
    
     
    
     
    
     
        
    
    இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
 
    
    சீனாவில் இருந்து அரிய பூமி கனிமங்களை இறக்குமதி செய்ய உரிமம் பெற்றுள்ள இந்திய நிறுவனங்கள் News Lankasri
 
    
    பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரர்.. வைல்டு கார்டு என்ட்ரி நடிகர் அமித் பார்கவ் பற்றி இது தெரியுமா Cineulagam
 
    
    77 பந்தில் சதமடித்த 22 வயது வீராங்கனை! உலகக்கிண்ண அரையிறுதியில் சாதனை..திணறும் இந்திய அணி News Lankasri
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        