மக்களின் ஆயுட்காலம் குறையும் அபாயம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டு மக்களின் ஆயுட்காலம் குறைவடையும் அபாயம் உருவாகியுள்ளது என முன்னிலை சோசலிச கட்சி தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்திற்கு அமைய கடன் மறுசீரமைப்பு செய்வதன் மூலம் மக்களின் ஆயுட் காலம் குறைவடையும் என முன்னிலை சோசலிச கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஆயுட்காலம் குறைவடையும் அபாயம்
பணியிலிருந்து நீக்கப்படும் பணியாளர்களுக்கு நட்டஈடு வழங்க ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தை பயன்படுத்த அரசாங்கம் முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார்.
தொழில் அமைச்சின் இந்த நடவடிக்கையும் மத்திய வங்கியின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையும் ஒன்றாக நடைபெற்றால் மக்களின் ஆயுட்காலம் குறையும் என அவர் தெரிவித்துள்ளார்.
இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் நாட்டு மக்களின் ஆயுட் காலம் 5 முதல் 10 ஆண்டுகள் வரையில் குறைவடையும் என துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |