பாரிய பொய்களைக் கூறி ஏமாற்றியுள்ள அநுர அரசு! ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி குற்றச்சாட்டு

Harshana Rajakaruna Dengue Prevalence in Sri Lanka Economy of Sri Lanka Petrol diesel price Farmers Issues
By Rakesh Jul 02, 2026 11:50 PM GMT
Report

அநுர அரசு ஆட்சிக்கு வருவதற்காக மக்களுக்குப் பாரிய பொய்களைக் கூறி ஏமாற்றியுள்ளது என  ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா குற்றம் சாட்டியுள்ளார்.

எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் நேற்று(02.04.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அம்பாறையில் ஐஸ் போதை பொருளுடன் வியாபாரி ஒருவர் கைது

அம்பாறையில் ஐஸ் போதை பொருளுடன் வியாபாரி ஒருவர் கைது

பொருளாதார நெருக்கடி

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

அரசு மீண்டும் ஒருமுறை பேருந்து கட்டணங்களை உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் காரணமாக மக்கள் கடுமையான வாழ்க்கைச் செலவுப் பிரச்சினைக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளது.

இந்த அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்னர், கப்பலில் இருந்து இறக்கப்படும் விலையிலேயே மக்களுக்கு எரிபொருள் வழங்கப்படும் என்றும், அமைச்சர்களின் எரிபொருள் தரகுப் பணம் ஒழிக்கப்படும் என்றும், மின்சாரக் கட்டணம் மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கப்படும் என்றும் பிரசாரம் செய்தது. ஆனால், இன்று எரிபொருள் விலை சுமார் 40 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பாரிய பொய்களைக் கூறி ஏமாற்றியுள்ள அநுர அரசு! ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி குற்றச்சாட்டு | Lies To The People Insult Farmers Sjp

அண்மையில் எரிபொருள் விலையை மிகக் குறைந்த தொகையினால் குறைத்திருந்த போதிலும், உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கும் போது விலையை உயர்த்தும் அரசு, உலக சந்தையில் விலை குறையும் போது அதன் நன்மைகளை மக்களுக்கு வழங்குவதில்லை.

உலக சந்தையில் விலை அதிகரிக்கும் போது ஒரு விலைச் சூத்திரமும், விலை குறையும் போது மற்றொரு விலைச் சூத்திரமும் பயன்படுத்தப்படுகின்றது.

இந்த விலை சூத்திரங்கள் மக்கள் விடுதலை முன்னணிகட்சி அலுவலகத்தில் தயாரிக்கப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. முறையான விலைச் சூத்திரம் பயன்படுத்தப்பட்டால் இவ்வாறு நடக்காது.

பெற்றோல் மற்றும் டீசல் விலை

மத்திய கிழக்குப் போருக்கு முன்னர் ஒரு லீற்றர் ஒட்டோ டீசல் 281 ரூபாவாக இருந்ததுடன், போரைக் காரணம் காட்டி அது 382 ரூபா வரை உயர்த்தப்பட்டது.

உலக நாடுகள் போர் முடிவடைந்ததும் டீசல் விலையைக் குறைத்த போதிலும் எமது அரசு அதனைக் குறைக்கவில்லை. அதேபோல், 293 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட 92 ரக பெற்றோல் தற்போது 414 ரூபாவாக உயர்ந்துள்ளது.

பாரிய பொய்களைக் கூறி ஏமாற்றியுள்ள அநுர அரசு! ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி குற்றச்சாட்டு | Lies To The People Insult Farmers Sjp

மக்களுக்கு வாழ முடியாத ஒரு எரிபொருள் விலைச் சூத்திரத்தையே அரசு உருவாக்கியுள்ளது. ஒரு மாதத்துக்குள் மூன்று தடவைகள் எரிபொருள் விலையை உயர்த்திய அரசு, உலக சந்தையில் விலை வீழ்ச்சியடைந்த போது மூன்று தடவைகள் விலையைக் குறைக்க முன்வரவில்லை.

இதன் மூலம் அரசு அதிக இலாபம் ஈட்டுவதுடன், தனியார் எரிபொருள் இறக்குமதி நிறுவனங்களுக்கும் தனிப்பட்ட இலாபம் கிடைக்கின்றது.

மேலும், 95 ரக பெற்றோல் மற்றும் சுப்பர் டீசல் நுகர்வோருக்கு எந்தவொரு நிவாரணமும் வழங்கப்படவில்லை. தற்போது நாட்டின் பணவீக்கம் 6.8 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளதால் அது ஏழை மக்களைப் பாரியளவில் பாதித்துள்ளது.

அத்தியாவசியப் பொருள்களின் விலைகளும் அதிகரித்துள்ளன. எனவே, எரிபொருள் விலை குறைந்ததன் நன்மையை உடனடியாக மக்களுக்கு வழங்க வேண்டும்.

ஜெர்மனி பொருளாதார சீர்திருத்தம்: நடுத்தர மக்களுக்கு வரி விலக்கு

ஜெர்மனி பொருளாதார சீர்திருத்தம்: நடுத்தர மக்களுக்கு வரி விலக்கு

டெங்கு நோய்

கியூ.ஆர். முறைமை மற்றும் ஒற்றை இரட்டை இலக்க முறைகளின் கீழ் எரிபொருள் விநியோகிப்பது அவசியமற்றது. இந்தக் கட்டுப்பாடுகள் பொருளாதாரத்தைச் சுருக்குவதால் இவற்றை அரசு உடனடியாக நீக்க வேண்டும்.

நாட்டில் டெங்கு நோய் தற்போது ஒரு மரண அச்சுறுத்தலாக மாறியுள்ளது. மருத்துவமனைகள் டெங்கு நோயாளர்களால் நிரம்பியுள்ளன.

பாரிய பொய்களைக் கூறி ஏமாற்றியுள்ள அநுர அரசு! ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி குற்றச்சாட்டு | Lies To The People Insult Farmers Sjp

டெங்குவைக் கட்டுப்படுத்த அரசிடம் முறையான திட்டங்கள் இல்லை. தேசிய மக்கள் சக்தி ஆட்சியிலுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் டெங்கு ஒழிப்புக்கான எந்தவொரு திட்டத்தையும் முன்னெடுக்கவில்லை.

மத்திய அரசும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழிகாட்டல்களையோ அல்லது தரமான இயந்திர உபகரணங்களையோ வழங்கவில்லை. டெங்குவை ஒழிப்பதில் இந்த அரசுக்கு எந்தவொரு அனுபவமும் இல்லை.

தொழிற்சங்கத் தலைவர்களே உள்ளூராட்சி மன்றங்களின் உயர் பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு முறையான தீர்மானங்களை எடுப்பதற்கான அறிவு இல்லை. இதன் விளைவாக நாட்டின் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

விவசாயிகளின் பிரச்சினை 

அதேநேரம், விவசாயிகள் இன்று பலத்த நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர். விவசாயிகளுக்குச் சரியான நேரத்தில் உரங்களை வழங்கவோ அல்லது நெல்லைக் கொள்வனவு செய்யவோ அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

நெல்லுக்கான நிலையான விலையைத் தீர்மானிக்கக் கூட அரசால் முடியவில்லை. தேசிய மக்கள் சக்தி விவசாயிகளை முற்றாக ஏமாற்றியுள்ளது.

பாரிய பொய்களைக் கூறி ஏமாற்றியுள்ள அநுர அரசு! ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி குற்றச்சாட்டு | Lies To The People Insult Farmers Sjp

'விவசாயி உலகுக்கு ராஜா' எனக் கூறி வாக்குகளைப் பெற்றவர்கள், இன்று விவசாயிகளைக் 'கசிப்பு வியாபாரிகள்' என அவமதித்து வருகின்றனர்.

விவசாயிகளின் தோள் மீது ஏறி ஆட்சிப் பீடமேறிய தேசிய மக்கள் சக்தி இன்று விவசாயிகளை மறந்துவிட்டனர். 

எனவே, ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டு, நலிவடைந்துள்ள விவசாயிகளுக்குத் தேவையான நிவாரணங்களை அரசு உடனடியாக வழங்க வேண்டும் என் சுட்டிக்காட்டியுள்ளார்.

லெபனான் - சிரியா இடையே 'தலையிடாமை' ஒப்பந்தம் கையெழுத்து

லெபனான் - சிரியா இடையே 'தலையிடாமை' ஒப்பந்தம் கையெழுத்து

மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US