கோவிட் காரணமாக கொழும்பின் முன்னணி வணிகவளாகம் மூடப்பட்டது!
கோவிட் வைரஸ் தொற்று காரணமாக கொள்ளுப்பிட்டியின் முன்னணி ஷொப்பிங் காம்லெக்ஸ்களில் ஒன்றான லிபர்டி பிளாஸா மூடப்பட்டுள்ளது.
கோவிட் தொற்றுக்கு இலக்கான சிலர் கட்டடத்தில் கண்டு பிடிக்கப்பட்டதனால் இவ்வாறு கட்டடம் மூடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த உத்தியோகத்தர்களும், கடைத் தொகுதியின் சில கடைகளில் கடமையில் ஈடுபட்டுள்ள பணியாளர்களும் நோய்த் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நோய்த் தொற்று பரவியவர்கள் பற்றிய விபரங்களை அறிந்து கொள்ளும் வரையில் கடைகள் மூடப்பட்டிருக்கும் எனவும் பீ.சீ.ஆர் பரிசோதனைகள் நடாத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடைத் தொகுதியில் குறைந்தபட்சம் 20 பேருக்கு நோய்த் தொற்று பரவியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.