புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இலங்கை கடற்றொழிலாளர்கள் விடுதலை
எல்லைத் தாண்டி சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 7 இலங்கை கடற்றொழிலாளர்களை இராமநாதபுரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் விடுவித்துள்ளது.
குறித்த 7 இலங்கை கடற்றொழிலாளர்களும் கடந்த 18 ஆம் திகதி இந்திய கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கடற்றொழிலாளர்களின் வழக்கு தொடர்ந்தும் நடைபெற்று வந்த நிலையில் வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
7 இலங்கை கடற்றொழிலாளர்கள்
இதன்போது குறித்த 7 இலங்கை கடற்றொழிலாளர்களையும் விடுதலை செய்யுமாறு மத்திய அரசு கோரியதன் அடிப்படையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், விடுதலை செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் ஏழு பேரும் சில தினங்களில் நாடு திரும்புவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |