முல்லைத்தீவில் ஊடகவியலாளர் ஒருவரை முறைகேடான முறையில் பரிசோதனை செய்த பொலிஸார்
மாங்குளத்திற்கு செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளரை வழிமறித்து வீதியில் முறைகேடான முறையில் பரிசோதனை செய்து செய்தி சேகரிப்பதற்கு பொலிஸார் இடையூறு விளைவித்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து மாங்குளம் பகுதிக்கு செய்தி ஒன்றினை கேகரிப்பதற்காக நேற்று (27.07.2024) காலை சென்ற சுயாதீன ஊடகவியலாளர் இராசையா உதயகுமாரினை ஒட்டுசுட்டானுக்கும் மாங்குளத்திற்கும் இடைப்பட்ட காட்டு பகுதியில் வைத்து வழிமறித்த பொலிஸார், சோதனை எனும் பெயரில் ஊடக பையிலிருந்த (Bag ) ஊடக சின்னங்களை (Logo) கீழே கொட்டி உதாசீனப்படுத்தியுள்ளனர்.
வீதியில் வழிமறித்து சோதனை
குறித்த ஊடகவியலாளர் பொலிஸார் வீதியில் வழிமறித்து சோதனையிடும் போது முல்லைத்தீவு மாவட்ட ஊடக அமைய மேற்சட்டையை அணிந்துள்ளார்.
இந்நிலையில், ஊடக சின்னங்களை
வைத்திருந்த போதும் பொலிஸார் அதனை கருத்தில் கொள்ளாது வீதியில் அவமதித்து
சோதனையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

43 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் அனுஷ்கா.. காதலனை பற்றி முதல் முறையாக கூறிய நடிகை Cineulagam

கடலுக்கு அடியில் மிகப்பெரிய ஜாக்பாட்டை கண்டுபிடித்த இந்தியாவின் நட்பு நாடு.., ஆனால் ஒரு சிக்கல் News Lankasri
