தமிழரசு கட்சியிடம் இருந்து அநுரவுக்கு அவசர கடிதம்
தமிழ் தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான கூட்டத்தைக் கோரி இலங்கைத் தமிழ் அரசு கட்சி (ITAK) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளது.
குறித்த கடிதத்தில், எமது கட்சியின் அண்மைய மத்திய செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவிற்கமைய நீங்கள் நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருடம் ஆகிறது.
உங்கள் தேர்தல் அறிக்கையில் மற்றும் பல அறிவிப்புகளில் இந்த மிக முக்கியமான பிரச்சினையைத் தீர்ப்பதாக நீங்கள் உறுதியளித்துள்ளீர்கள். இருப்பினும், கடந்த ஒரு வருடமாக இந்த விடயத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அளிக்கப்பட்ட வாக்குறுதி
முதன்மையான தமிழ் அரசியல் கட்சி என்ற முறையில் மேற்கூறிய பிரச்சினை தொடர்பாக உங்கள் அரசாங்கத்துடன் கலந்துரையாட நாங்கள் தயாராக உள்ளோம்.

இந்த வகையில் உங்களைச் சந்திக்க கீழே கையொப்பமிடப்பட்டுள்ள தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் எங்கள் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட குழு உங்களை விரைவில் சந்திக்க ஒரு நேரத்தை ஒதுக்க தயவுசெய்து நேரம் ஒதுக்குங்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
பாகிஸ்தானின் அணுசக்தி நிலையத்தை தாக்க இந்தியா-இஸ்ரேல் ரகசிய திட்டம்: CIA அதிகாரி வெளியிட்ட தகவல் News Lankasri
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam