ரஞ்சனின் விடுதலை குறித்து ஜனாதிபதிக்கு முன்னாள் ஜனாதிபதி கடிதம்
ரஞ்சனின் விடுதலை குறித்து ஜனாதிபதிக்கு முன்னாள் ஜனாதிபதி கடிதம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
நடிகரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சனுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
கடந்த எட்டு மாதங்களாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு மன்னிப்பு வழங்குமாறு அவர் ஜனாதிபதியிடம் கடிதம் ஊடாக கோரியுள்ளார்.
பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சில நபர்களுக்கு ஜனாதிபதி கருணை காட்டியுள்ளதாகவும், மக்களின் மெய்யான சேவகர்களில் ஒருவரான ரஞ்சனுக்கும் அதே கருணையை காட்டுமாறும் சந்திரிக்கா தனது கடிதத்தில் கோரியுள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்க செய்த தவறு பாரதூரமானதல்ல என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.






அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 16 மணி நேரம் முன்

One in, one out திட்டத்துக்கு முதல் தோல்வி: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்ட விமானம் News Lankasri

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
