இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த உதவுமாறுக்கோரி பிரேசில் ஜனாதிபதிக்கு கடிதம்

Brazil
By Independent Writer Mar 14, 2021 02:21 AM GMT
Independent Writer

Independent Writer

in இலங்கை
Report

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான தீர்மானத்தில் இலங்கையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC)பாரப்படுத்த வேண்டியமையை உள்ளடக்குவதற்கு உதவுமாறுக்கோரி பிரேசில் ஜனாதிபதி ஜயர் பொல்ஸ்னாறோவிற்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பிரேசிலானது ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உயிர்ப்பான ஓர் உறுப்பு நாடாக விளங்குவதுடன், உலகின் அதிகாரம் மிக்க நாடுகளில் ஒன்றாகவும் இருப்பதால் ஐக்கிய இராச்சியம், கனடா, ஜேர்மனி, மொன்ரினேக்றோ மற்றும் வட மசிடோனியா ஆகிய நாடுகளால் இணைந்து சமர்ப்பிக்கப்பட்ட 2021ம் ஆண்டு மாசி மாதம் 19ம் திகதியிடப்பட்ட 'பூச்சிய வரைவு' என அழைக்கப்படுகின்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான தீர்மானத்தில் இலங்கையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC)பாரப்படுத்த வேண்டியமையை உள்ளடக்குவதற்கு உதவுமாறு கோருகின்றோம் என தவத்திருவேலன் சுவாமிகள், எஸ். சிவயோகநாதன் மற்றும் வண. பிதா. கந்தையா ஜெகதாஸ்(ஒருங்கிணைப்பாளர்கள்) ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

பிரேசில் ஜனாதிபதி ஜயர் பொல்ஸ்னாறோவிற்கு எழுதிய கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பிரேசிலானது ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உயிர்ப்பான ஓர் உறுப்பு நாடாகவிளங்குவதுடன் உலகின் அதிகாரம் மிக்க நாடுகளில் ஒன்றாகவும் இருப்பதால் ஐக்கிய இராச்சியம், கனடா, ஜேர்மனி, மொன்ரினேக்றோ மற்றும் வட மசிடோனியா ஆகிய நாடுகளால் இணைந்து சமர்ப்பிக்கப்பட்ட 2021ம் ஆண்டு மாசி மாதம் 19ம் திகதியிடப்பட்ட “பூச்சிய வரைவு” என அழைக்கப்படுகின்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான தீர்மானத்தில் இலங்கையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC)பாரப்படுத்த வேண்டியமையை உள்ளடக்குவதற்கு உதவுமாறு கோருகின்ற மேன்முறையீட்டின் பொருட்டு இதனை நாம் வரைகிறோம்.

இந்நாடுகள் இத்தீர்மானத்தை வரைந்தபோது பாதிக்கப்பட்டோரைக் கலந்தாலோசிக்கக் கூடவில்லை என்பதுடன் அவை தன்னிச்சையாகவரையப்பட்ட இப் “பூச்சிய வரைவு” தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்க முன்னர் தமிழர்களால் மேற்கொள்ளப்பட்ட இணைந்த மேன்முறையீடுகளையும் புறக்கணித்துள்ளன.

பிரேசிலானது ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஓர் உறுப்பினராக இருப்பதால் “பூச்சிய வரைவு” தீர்மானத்தில் இலங்கையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ஐசீசீ) பாரப்படுத்த வேண்டியமையை உள்ளடக்குவதற்குப் பரிந்துரை செய்வதற்கான சகல உரிமைகளையும் தாங்கள் கொண்டுள்ளீர்கள்.

பாதிக்கப்பட்டோராகவும், பாதிக்கப்பட்டோரின் பிரதிநிகளாகவும் “பூச்சிய வரைவு” தீர்மானத்தில் இலங்கையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) பாரப்படுத்த வேண்டியமையை உள்ளடக்குவதற்கு உதவுமாறு தங்களிடம் நாம் மேன்முறையீடு செய்கிறோம்.

இப்“பூச்சிய வரைவு” தீர்மானமானது இலங்கைப் பாதுகாப்புப் படையினரால் புரியப்பட்ட தமிழ் மக்களைக் கொத்துக் கொத்தாகக் குன்று குவித்தமை மற்றும் தமிழ்ப் பெண்களைப் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கியமை அடங்கலான கொடூரமான குற்றங்களினால் பாதிக்கப்பட்டோரின் அடிப்படை எதிர்பார்ப்புக்களையேனும் பூர்த்தி செய்யவில்லை.

08/03/2இந்நிலவரத்தின் தீவிரத் தன்மையின் காரணமாகத் தமிழர்கள் ஒன்றிணைந்து ஒருமாதத்திற்கு முன்னர் 2021ம் ஆண்டு தை மாதம் 15ம் திகதியன்று, இலங்கையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) பாரப்படுத்த வேண்டியமையை வலியுறுத்தி கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தனர்.

இவ்வழைப்பானது வடக்கு-கிழக்கு சிவில் சமூகத்தினரால் ஒழுங்கமைக்கப்பட்ட பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி (P2P) வரை என்றழைக்கப்பட்ட அண்மைய பேரணியில் பங்குபற்றிய பல்லாயிரக்கணக்காகத் தமிழர்களினால் மேலும் வலுசேர்க்கப்பட்டிருந்தது.

இலங்கையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) பாரப்படுத்தாமல் விடுதலானது கொடூரமான குற்றங்களைப் புரிந்தோர் நீதியிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு வழிகோலுவதுடன் மாத்திரமல்லாது, அது இலங்கையின் அரசியற் தலைவர்களும் பாதுகாப்புப் படைப் பிரதானிகளும் தாம் நீதிக்கு முகங்கொடுக்கத் தேவையில்லை என்பதை நன்கறிந்து கொண்டு, எதுவிதத் தயக்கமும் இல்லாமல் தமிழ்மக்களிற்கு எதிரான சர்வதேசக் குற்றங்களைப் புரிவதற்கான துணிச்சலையும் ஏற்படுத்திவிடும்.

எனவே இலங்கையானது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு(ICC) பாரப்படுத்தாமல் விடப்படின் தமிழ் மக்கள் எதிர்கொள்ளவல்ல இந்த அபாயத்தைத் தீவிரமாகக் கவனத்திற் கொள்ளுமாறு நாம் தங்களை வலியுறுத்திக்கேட்டுக்கொள்கிறோம். மேலும், மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் தற்போதைய உயர் ஆணையாளராகிய மிச்சேல் பச்சலெட் அவர்கள் 2021ம் ஆண்டு தைமாதம் 27ம் திகதியிடப்பட்ட தனது அறிக்கையில், இலங்கையிலுள்ள நிலவரத்தைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) பாரப்படுத்த வேண்டியமையை நோக்காகக் கொண்டு நடவடிக்கைகளை எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையிடம் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், ஐ.நா. மனித உரிமைகளுக்கான நான்கு முன்னாள் உயர் ஆணையாளர்கள், ஒன்பது சுயாதீன ஐ.நா.நிபுணர்கள் மற்றும் இலங்கை சம்பந்தமான ஐ.நா. செயலாளர் நாயகத்தின் வல்லுநர்கள் குழுவின் சகல உறுப்பினர்களும் அடங்கலாக இருபது முன்னாள் ஐ.நா. அதிகாரிகள் “யுத்த விதைகளை விதைத்தல்” எனத் தலைப்பிடப்பட்டு 2021ம் ஆண்டு மாசி மாதம் 18ம் திகதி வழங்கிய தமது அறிக்கையில் இலங்கையானது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) பாரப்படுத்தப்பட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

“இலங்கையானது தனது நீதித்துறை நிறுவனங்களை அதனுடைய மதிப்புற்றோரிற்காகச் செயற்பட முடியாதவையாக ஆக்கியுள்ளது என்பதே கருத்திற் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும்.

எனவே, சர்வதேச அல்லது வெளிப்புற நியாயாதிக்கத்தினூடாக நீதியை நிலைநாட்டுவதன் பொருட்டு மதிப்புற்றோருக்கும் அவர்களுடைய பிரதிநிதிகளுக்குமாகப் பணியாற்றுவதற்காக உயர் ஆணையாளரின் பரிந்துரைகளை நாம் மீள வலியுறுத்துகிறோம். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) போன்ற பொறுப்புக்கூறலுக்கான சர்வதேச வழிவகைகள் கருத்திற் கொள்ளப்படுதல் வேண்டும்” எனக் குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தினால் தமிழ் மக்களிற்கு எதிராகப் புரியப்பட்டுள்ள சர்வதேசக் குற்றங்களின் சில உதாரணங்கள்

1. ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் பொறுப்புக் கூறுதலுக்கான நிபுணர்கள் குழுவினுடைய 2011ம் ஆண்டு பங்குனி மாத அறிக்கையின் பிரகாரம், இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான ஆயுதந்தாங்கிய யுத்தத்தின் இறுதி நிலைகளின் போது போர்க் குற்றங்களும் மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்களும் புரியப்பட்டுள்ளதாகவும் 40,000க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் மரணித்துள்ளதாகவும் நம்பத்தகு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

2. இலங்கை மீதான நடவடிக்கை தொடர்பான ஐநா செயலாளர் நாயகத்தின் உள்ளக மீளாய்வுக் குழுவின் 2012 கார்த்திகை மாத அறிக்கையின் பிரகாரம் 2009 ம்ஆண்டின் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது 70,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காணாமற் போயுள்ளனர்.

3. அரசாங்கத்தால் யுத்த சூனிய வலயங்கள் (பாதுகாப்பு வலயங்கள்) எனக் குறித்தொதுக்கப்பட்ட பிரதேசங்களில் இலங்கைப் படையினர் அடுத்தடுத்து குண்டுத்தாக்குதல்களையும் எறிகணை வீச்சுக்களையும் மேற்கொண்ட போது பலர் கொல்லப்பட்டனர். வைத்தியசாலைகள் மற்றும் உணவு விநியோக நிலையங்களின் மீதுகூடக் குண்டுகள் வீசப்பட்டன. பலர் பட்டினியின் காரணமாக இறந்ததுடன் மருத்துவச் சிகிச்சையின்மையால் குருதிப்பெருக்கேற்பட்டும் மரணித்தனர்.

4. 2017ம் ஆண்டு மாசி மாதம் உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேசக் கருத்திட்டமானது (ஐரீஜேபீ), தமிழ்ப் பெண்கள் பாலியல் அடிமைகளாகக் கையாளப்பட்டு இலங்கை இராணுவத்தினரால் நடாத்தப்பட்ட கற்பழிப்பு முகாங்கள் பற்றிய விபரங்களை ஐ.நா விடம் கையளித்தது.

5. ஐக்கிய இராச்சியத்தின் வெளிநாட்டு மற்றும் பொது நலவாய அலுவலகத்தின்2013 சித்திரை மாதத்திற்குரிய அறிக்கைக்கு அமைவாக, இலங்கையில் 90,000க்கும் மேற்பட்ட யுத்த மூல விதவைகள் உள்ளனர். 6. குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் அடங்கலாக ஆயிரக்கணக்கான தமிழர்கள் காணாமற்போயுள்ளனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான ஐநாவின் பணிக்குழுவானது உலகில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் இரண்டாவது அதிகூடிய எண்ணிக்கை இலங்கையில் உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

சர்வதேசக் குற்றங்களுக்குரிய பொறுப்புக்கூறல் தொடர்பாக இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள பொய்யான வாக்குறுதிகளின் வரலாறு அடுத்துவந்த இலங்கை அரசாங்கங்கள் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் (UNHCR)தீர்மானங்களை அமுற்படுத்தத் தவறியுள்ளமையையும் தங்களுடைய கவனத்திற்குக் கொண்டுவர நாம் விரும்புகிறோம். முன்னைய அரசாங்கமானது அது இணையனுசரணை வழங்கிய தீர்மானத்தை அமுற்படுத்துவதற்குரிய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியது மாத்திரமல்லாது, முரணாக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர்களும் தாம் UNHCR தீர்மானத்தை அமுற்படுத்த மாட்டோம் எனத் திரும்பத்திரும்பவும் ஆணித்தரமாகவும் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய புதிய அரசாங்கமானது ஒரு படி கூடுதலாகச் சென்று தீர்மானங்கள் 30/1,34/1 மற்றும் 40/1 களுக்குரிய இணையனுசரணையிலிருந்து விலகியுள்ளதுடன், யூஎன்எச்ஆர்சீ பொறுப்புக்கூறல் செயற்பாட்டிலிருந்தும் வெளிநடப்புச் செய்துள்ளது.

மேலும், UNHCR இனை இழிவுபடுத்தும் விதமாக, சிறுவர்கள் அடங்கலாகப் பொதுமக்களைக் கொலை செய்தமைக்காக தண்டிக்கப்பட்டு மரண தண்டனை வழங்கப்பட்டிருந்த ஒரேயொரு படைச்சிப்பாயும் தற்போதைய ஜனாதிபதியால் பொதுமன்னிப்பு வழங்கி விடுவிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், போர்க்குற்றங்கள் புரிந்தமைக்காக நம்பத்தகு முறையில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த பல்வேறு சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளுக்குப் பதவியுயர்வுகள் வழங்கப்பட்டிருப்பதுடன் “யுத்த நாயகர்களாக” ஆகவும் மதிப்பளிக்கப்படுகிறார்கள். ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் யுத்தக் குற்றவாளியாகச் சந்தேகிக்கப்படுகின்ற ஓர் உத்தியோகஸ்தர் நான்கு நட்சத்திர அதிபதியாக பதவியுயர்த்தப்பட்டுள்ளார்.

எமது மேன்முறையீட்டைத் தீவிரத்தன்மையுடன் கருத்திற் கொள்வதன் பொருட்டும், இலங்கையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) பாரப்படுத்த வேண்டியமையை “பூச்சிய வரைவு” தீர்மானத்தில் உள்ளடக்குவதன் பொருட்டும் தங்களிற்கு நாம் மேன்முறையீடு செய்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

3ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, ஜேர்மனி, Germany

08 Jul, 2015
13ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
மரண அறிவித்தல்

சுழிபுரம், சுதுமலை, வவுனியா, Colombes, France

30 Jun, 2025
மரண அறிவித்தல்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, நியூ யோர்க், United States, கோண்டாவில் கிழக்கு

30 Jun, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, Chur, Switzerland

20 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, கிளிநொச்சி

01 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரங்குணை, குப்பிளான், சென்னை, India, Toulouse, France

24 Jun, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Herne, Germany

30 Jun, 2015
மரண அறிவித்தல்

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொழும்பு, Brampton, Canada

29 Jun, 2025
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
38ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், India, புங்குடுதீவு

30 Jun, 1987
மரண அறிவித்தல்

புளியங்கூடல், கல்விளான், விசுவமடு, கொக்குவில், Paris, France, Basel, Switzerland

27 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வடமராட்சி, London, United Kingdom

23 Jun, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

நவாலி, உடுவில், பிரித்தானியா, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Stains, France

22 Jun, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

23 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், திருநகர், Scarborough, Canada

01 Jul, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US