இலங்கை - இந்திய மீனவர்களின் பிரச்சினை தீர்க்கக்கோரி தமிழ் நாட்டு முதலமைச்சருக்கு கடிதம்

Srilanka India
By Independent Writer Mar 05, 2022 06:52 PM GMT
Report

நீண்ட காலமாக இடம்பெற்று வரும் இலங்கை இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்குமாறும் கோரி யாழ்.மாவட்டம் உட்பட ஏனைய நான்கு மாவட்ட மீனவர் சங்க பிரதிநிதிகள் ஒன்றிணைந்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஊடகங்கள் வாயிலாக கோரிக்கை கடிதம் அனுப்பவுள்ளதாக யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளன தலைவர் அன்னராசா தெரிவித்தார்.

இன்று தமிழ்நாட்டு முதலமைச்சருக்கு கடிதம் அனுப்புவது தொடர்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை இந்திய மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு நோக்கி இரண்டு அரசாங்கங்களும் செயற்படவில்லை என்பது வடக்கு மீனவர்கள் மத்தியில் கவலையாக உள்ளது.

எனவே மீனவர்கள் போராடும்போதும் ஆர்ப்பாட்டம் செய்யும் போதும் பிரதேச செயலகங்களில் முற்றுகையிடும் போது மீனவர்களுக்கு கொடுக்கின்ற முக்கியத்துவமும் ,அத்தோடு இரண்டு அரசாங்கங்களும் தீர்வு பெற்றுத் தருவார்கள் என காத்திருந்த போதிலும் தீர்வு பெற்றுக் கொடுப்பது என்பது பேசுபொருளாக மாத்திரமே காணப்படுகின்றது.

எனவே இன்றைய தினம் இலங்கை கடற் தொழிலாளர்கள் ஒரு வேண்டுகோளினை, பத்திரிகை ஊடாக, கௌரவ தமிழ் நாட்டு முதலமைச்சர் அவர்களுக்கு அனுப்ப இருக்கிறோம்.

குறித்த கடிதத்தில் மூலம் தமிழ்நாட்டு மற்றும் எமது வட இலங்கை மீனவர்களுக்கிடையிலான தொப்புள்கொடி உறவுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாதவண்ணம் இந்த கடிதம் ஒரு தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

தமிழ் நாட்டு முதலமைச்சருக்கு அனுப்பப்படவுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடற்றொழிலாளர்களின் வேண்டுகோள் வட இலங்கையின் யாழ்ப்பாணம், மன்னார், -கிளிநொச்சி, மற்றும் முல்லைத்தீவு ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த கடற்றொழிலில் தங்கியிருக்கும் ஏறத்தாழ இரண்டு இலட்சம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி இந்த வேண்டுகோளை முன்வைக்கின்றோம்.

முப்பது வருடகால யுத்தந்தினால் சொல்லமுடியாத துயரங்களையும் அழிவுகளையும் நாங்கள் சந்தித்திருந்தோம். யுத்தம் காரணமாக வெளி மாவட்டங்களிலும் தென்னிந்தியாவிற்கும் என தொடர்ச்சியான இடப்பெயர்வுகளையும், உயிர் மற்றும் உடமை இழப்புக்களையும் சந்தித்திருந்தோம்.

யுத்த காலத்தில் எமது சமூகத்திற்கு அடைக்கலம் தந்தமைக்குத் தமிழ்நாட்டு மக்களுக்கு முதற்கண் எமது தெரிவிக்கின்றோம். நன்றியினை யுத்தத்திற்குப் பின்பு எழுது வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தை மீளக்கட்டிபெழுப்ப கடுமையாக முயற்சிந்த போதிலும் பல சவால்களையும் தோல்விகளையுமே நாம் சந்திக்க நேர்ந்தது.

வருமானத்தின் வீழ்ச்சி மற்றும் பெரும் கடன் சுமை காரணமாக எமது இளந்தலைமுறை கடற்றொழிலையே கைவிடும் நிலைமை ஏற்பட்டுள்ளது. யுத்ததிற்கு பின்பான இந்த சமூக பொருளாதார சூழலுக்கான முக்கிய காரணம் தழிழ்நாட்டு இழுவைப்படகுகள்.

இந்த இழுவைப்படகுகள் எமது கடல் எல்லைக்குள் அத்துமீறி வலைகளை அறுத்துச்செல்வதனால் பெரும் இழப்புகள் ஏற்படுகின்றன. மேலும் சொத்து இழப்புக்களைத் தவிர்க்க நாம் இழுவைப்படகுகள் வரும் நாட்களில் கடலுக்கு போகாமல் இருப்பதால் பெருமளவான வருமானத்தை இழக்கின்றோம்.

கடல் வளங்களைச் சுரண்டும் இழுவைமடிகளால் சிறு மீனவர்களின் உற்பத்தியில் பாரியவீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அழுலைமடி முறையால் வட இனங்கை மற்றும் தமிழ்நாட்டு சிறு உற்றொழிளர்களின் எதிர்காலமே அழிக்கப்படுகின்றது.

இந்தப்பிரச்சினை இலங்கை கடற்றொழிளாளருக்கும் தமிழ்நாட்டு கூற்றொழினாளருக்கும் இடையில் இருக்கும் வரலாற்று ரீதியான உறவையே பாதிகின்றது.

இழுவைப் படகுகளை முற்றாக நிறுத்துமாறு” இருநாட்டு உற்றோழிலாளர்களுக்கு மந்தியில் 2004 ஆம் ஆண்டு தொடக்கம் 2016 ஆம் ஆண்டு விரை பல பேச்சுவார்த்தைகள் நடைப்பெற்றபோதிலும், அவற்றின் மூலமாக ஒரு நிவையும் எட்டமுடியவில்லை.

உாண்மையில் இந்தப்பிரச்சினைக்கான தீர்வு என்பது” இரு நாட்டுக் கடலிலும் இழுவைப்படகு முறையினைத் செய்வதாகும். எனினும் இந்த பிரச்சினையைத் நீரப்பதற்கான அரசியல் விருப்பு நடை இரு நாடுகளின் மத்திய மற்றும் மாநில அரசியல் தலைமைத்துனங்களிடம் இருக்கவில்லை.

முதலமைச்சராக பதவியேற்ற பின்பு தென்னிந்தியாவில் வாழும் இலங்கை தமிழ் அகதி மக்களுக்காக நீங்கள் முன்வைத்த தீர்வுகளை அறிந்த நாம் உங்களுக்கு எமது நன்றிகளை கூறக் கடமைப்பட்டுள்ளோம்.

உங்களுடைய இவ்வாறான முற்போக்கான பார்வையில் தமிழ்நாட்டு இழுவைப்படகுகளால் பாதிக்கப்படும். வட இலங்கை கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளையும் கவனத்தில் கொண்டு இதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு திர்வுகளைப் பெற்றுத்தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம். 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US