பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு ஏன் உறுப்பினர்களை நியமிக்கபடவில்லை? மஹிந்தவுக்கு கடிதம்
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு இதுவரை ஆணைக்குழு உறுப்பினர்கள் நியமிக்காமை தொடர்பாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் சேவையாளர்கள் சங்கம் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்குக் கடிதமொன்றை அனுப்பியுள்ளது.
ஆணைக்குழு உறுப்பினர்கள் ஐவரும் தங்களது இராஜிநாமாக் கடிதங்களை வழங்கி ஒரு மாதத்துக்கும் மேலாகின்ற நிலையில், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கான புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படவில்லை என்பது தொடர்பில் குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆணைக்குழுவுக்கான புதிய உறுப்பினர்களை நியமிக்க வேண்டிய பொறுப்பு அமைச்சருக்குரியது என்றும், நிதி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவே நியமனங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஆணைக்குழுவில் ஏற்பட்டுள்ள வெற்றிடங்களுக்கு ஒரு மாத காலத்துக்குள் உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டியுள்ள நிலையில், வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன எனவும் சேவையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பீகார் சென்ற அய்யனார் துணை குடும்பத்திற்கு ஷாக் கொடுத்த சந்தா அப்பா... புதிய பரபரப்பான புரொமோ Cineulagam
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri
ட்ரம்பின் முற்றுகை ஒரு பக்கம்... 34 எண்ணெய்க் கப்பல்களை சாமர்த்தியமாக வெளியேற்றிய ஈரான் News Lankasri