“பெரு மதிப்பிற்குரிய ஜனாதிபதி மாமா” : தமிழ் அரசியல் கைதியின் மகள் ஜனாதிபதிக்கு உருக்கமான கடிதம்
தமிழ் அரசியல் கைதியின் மகள் ஒருவர் தனது தந்தையின் விடுதலையைக் கோரி இலங்கை ஜனாதிபதிக்குக் கடிதத்தை அனுப்பியுள்ளார்.
பெரு மதிப்பிற்குரிய ஜனாதிபதி மாமா என ஆரம்பித்து அக்கடிதத்தில் அவர் குறிப்பிடுகையில், எனது அப்பா சதீஸ்குமார் 2008ஆம் ஆண்டு புலிகள் அமைப்புக்கு உதவியதாகக் கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டார்.
அப்பா செலுத்திச் சென்ற வாகனத்திலிருந்து சிறிதளவு வெடி பதார்த்தம் கண்டெடுக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டதன் பெயரில் 2011ஆம் ஆண்டு நீதிமன்றம் அப்பாவுக்கு ஆயுள் கால சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்து விட்டது.
உயிரிழப்போ, வெடிப்பு சம்பவமோ, வெடிப்பை ஏற்படுத்தும் நிலையோ இல்லாத ஒரு விடயத்திற்கு அப்பா ஆயுள் தண்டனை அனுபவிப்பது எமது மொத்த குடும்பத்தையும் வேதனையுறச் செய்கிறது. அப்பாவுக்கு என்னுடன் சேர்ந்து வாழ ஒரேயொரு சந்தர்ப்பம் அளித்து உதவுங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இக்கடிதத்தில் அவர் தன்னை எந்தமாதிரியான செயற்பாடுகள் இந்த கடிதத்தை எழுதத் தூண்டின என்பதை அழகாக வர்ணித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.





பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

கார் பிரச்சனையில் தப்பித்த முத்து-மீனாவிற்கு வந்த அடுத்த அதிர்ச்சி.. என்ன செய்வார்கள், சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.., எந்தெந்த பகுதிகளில் மழை? News Lankasri
