தேர்தல் ஆணைக்குழுவிடமிருந்து பிரதமருக்குச் சென்ற கடிதம்
நாட்டில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுமாறு பொது நிர்வாகம், உள்ளூராட்சி மன்றம் மற்றும் மாகாண சபைகள் அமைச்சரும், பிரதமருமான தினேஷ் குணவர்தனவிடம் தேர்தல் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடவே இன்றைய தினம் (26.03.2023) இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான கோரிக்கை எழுத்து மூலம் பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அரச ஊழியர்களுக்குச் சம்பளம்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வேட்பாளராகத் தோற்றிய அரச ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்குவது தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் இங்குக் கவனம் செலுத்த எதிர்பார்ப்பதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவை அழைத்துக் கலந்துரையாடுவதற்குத் தீர்மானித்துள்ளதாகப் பிரதமர் தினேஷ் குணவர்தன அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
