தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி அணிதிரள்வோம்! - கவிஞர் காசி ஆனந்தன் அழைப்பு
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐக்கிய நாடுகள் நோக்கி அணிதிரள அனைவருக்கும் கவிஞர் காசி ஆனந்தன் அழைப்பு விடுத்துள்ளார்.
சுவிற்சர்லாந்து நாட்டிலுள்ள ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் இது தொடர்பிலான பேரணி எதிர்வரும் 01.03.2021 அன்று பிற்பகல் 2:30 மணிக்கு ஆரம்பமாகி 5 மணி வரையில் இடம்பெற்றவுள்ளதாக தெரியவருகிறது.
இது தொடர்பில் காசி ஆனந்தன் தெரிவிக்கையில், போராட்டமே வாழ்வாகிப் போன ஒரு இனத்தின் விழுதுகள் நாம்.
அதை தாங்கும் வேர்களும் நாமே. பட்டுப்போனாலும் சரிந்து விழவிடாமல் தாங்கி நிக்கும் வேர்களும் விழுதுகளுமாய் நாம் நிற்கின்றோம் என்பதை உணர்ந்து கொள்வோம்.
மீண்டும் தளிர்விடும் காய்ந்த மரத்தின் இடுக்குகளுக்கு பலம் கொடுக்கும் நம்பிக்கையாளர்களாய் நாம் இருப்போம்.
இணைந்து பணி செய்வோம் நாமனைவரும் உணர்ந்து பணி செய்வோம் என்று குறிப்பிட்டுள்ளார்.





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 48 நிமிடங்கள் முன்

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
