பாலிதவின் கருத்து முட்டாள்தனமானது : தேர்தல்களை ஒத்திவைக்க இடமளியோம் - சஜித் சூளுரை
இரண்டு பிரதான தேர்தல்களையும் ஒத்திவைக்க நாம் ஒருபோதும் இடமளியோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ(Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
தேர்தலை எதிர்கொள்ள தயார்
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும்(Ranil Wickremesinghe), ஐ.தே.க. - மொட்டுக் கட்சிகளும் தோல்விப் பயத்தில் ஜனாதிபதித் தேர்தலையும், நாடாளுமன்றத் தேர்தலையும் ஒத்திவைக்க முயற்சிக்கின்றன.
இதற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் இடமளியாது. ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலிதவின் கருத்து முட்டாள்தனமானது.
அவரின் யோசனைக்கு நாட்டின் அரசமைப்பில் இடமேயில்லை. அரசமைப்பின் பிரகாரம் பிரதான இரண்டு தேர்தல்களையும் அரசு நடத்தியே தீர வேண்டும். இரண்டு தேர்தல்களையும் எதிர்கொள்ள நாம் தயாராகவுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 1 மணி நேரம் முன்

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதாரத் தடை - இந்திய நிறுவனமும், இந்திய வம்சாவளி கேப்டனும் நேரடி பாதிப்பு News Lankasri
