போதைப்பொருளை முற்றாக ஒழிக்க ஒன்றிணைவோம்: மாவை சோ. சேனாதிராஜா
தமிழர் பிரதேசங்களில் போதைப்பொருளை முற்றாக ஒழிக்க அனைவரும் ஒன்றிணைந்து நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பில் இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், போதைப்பொருள் விநியோகத்தின் மையமாக வடக்கு மாகாணம் திகழ்கின்றது என்று நீதி அமைச்சர் வெளியிட்டுள்ள கருத்து மக்களைப் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
போதைப்பொருள் விநியோகம்
வடக்கில் இளையோரைக் குறிவைத்து போதைப்பொருள் விநியோகிக்கப்படுகின்றது.
பாடசாலை மாணவர்களும் இதற்கு அடிமையாகியுள்ளனர்.
இளம் சமூகத்தை குறிவைத்தல்
எதிர்காலத்தில் எமது சமுதாயத்தை வழிநடத்துபவர்கள் இன்று போதைப்பொருள் பாவனையால் அழிந்துபோவதை நாம் கைகட்டி வேடிக்கை பார்க்க முடியாது.
இதற்கு
உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
வடக்கில் மட்டுமின்றி தமிழர் வாழும் பிரதேசங்களில் போதைப்பொருளை முற்றாக ஒழிக்க
அனைவரும் ஒன்றிணைந்து நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்" - என்றார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 21 மணி நேரம் முன்

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
