பசில் வகுக்கும் வியூகத்தில் நாம் வீறுகொண்டெழுவோம்!:மொட்டு கட்சி செயலாளர் சூளுரை
"ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை வெற்றிநடை போட வைப்பதற்கான வியூகங்களை பசில் ராஜபக்ச தற்போது வகுத்து வருகின்றார். அந்தவகையில் விரைவில் வீறுகொண்டெழுவோம்."என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வெற்றி வியூகம் வகுக்கப்பட்டும்

அவர் மேலும் கூறியதாவது,"அரசமைப்பின் 21 ஆவது திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னரே பசில் ராஜபக்ச எம்.பி. பதவியை துறந்துவிட்டார். ஆனாலும், அரசியல் பயணம் தொடரும் என அறிவித்தார்.
அந்தவகையில் தற்போது வெற்றி வியூகம் வகுக்கப்பட்டு வருகின்றது. பலமான சக்தியாக எழுவோம். எந்தவொரு தேர்தல் நடத்தப்பட்டாலும் தனித்துப் போட்டியிடக்கூடிய வல்லமை எம் வசம் உள்ளது.
அதேபோன்று கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதற்கும் பின்நிற்கப்போவதில்லை. மக்களின் தேவைப்பாடு அறிந்து அதற்கேற்ப முடிவு எடுக்கப்படும்"என தெரிவித்துள்ளார்.
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan