தேர்தலை நடத்தக் கோரி கொழும்பில் மாபெரும் போராட்டம்: சஜித் அணி தீர்மானம்
நாட்டின் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலை உரியத் திகதியில் நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வலியுறுத்தி கொழும்பில் மாபெரும் போராட்டத்தை நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
அதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை (20.02.2023) இப்போராட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
அத்துடன், இப்போராட்டம் நிதி அமைச்சுக்கு முன்பாகவும், ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகவும் நடத்தப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாநகர மேயர் வேட்பாளர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
தேர்தல் நடத்தப்பட வேண்டும்
"தேர்தலை நடத்தாமல் இந்த அரசால் முன்னோக்கிச் செல்ல முடியாது. எனவே, தேர்தல் நடத்தப்பட வேண்டும். திங்கள் கொழும்பைச் சுற்றிவளைப்போம்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனநாயகத்தை நிலைநாட்ட விரும்பும் அனைத்துத் தரப்பினரும் இந்தப் போராட்டத்தில்
பங்கேற்க வேண்டும் என்றும் முஜிபுர் ரஹ்மான் மேலும் தெரிவித்துள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam
