இந்திய மீனவர்களின் பிரச்சனை தொடர்பில் பத்தாயிரம் படகுகளுடன் சென்று பேசிப்பார்ப்போம் - டக்ளஸ் தேவானந்தா
இந்திய மீனவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காணாவிட்டால் இங்கிருந்து கதைப்பதை விட பத்தாயிரம் வடமாகாண கடற்தொழிலாளர்களுடன் இந்தியாவிற்கு படகில் சென்று அந்த பிரச்சனையினை தீர்ப்பதற்கு யோசித்துக்கொண்டிருக்கின்றேன் என கடற்தொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்
முல்லைத்தீவில் இடம்பெற்றுவரும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைக்கூறியுள்ளார்.
இதன் போது அவர் மேலும் கூறுகையில்,
சில தனவந்தர்கள்,முற்போக்காளர்கள் முன்வந்து முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 100 மில்லியன் ரூபா நிதி தருவதாகவும் அது மாவட்ட கடற்தொழிலாளர்களை சென்றடைய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்கள், அதனுடன் அரசாங்கத்திற்கு ஊடாகவும்,வெவ்வேறு நிதி நிறுவனங்கள் ஊடாகவும் நிதியினை பெற்று சுமார் இரண்டு ஆண்டுகளுக்குள் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்களின் பாதுகாப்பினை பலப்படுத்தி உறுதிப்படுத்தவுள்ளேன்.
வடக்கு கிழக்கில் நீர்வேளாண்மையினை வேகமாக விரைவாக செய்வதற்கு உத்தேசித்துள்ளேன் இரண்டு ஆண்டுகளுக்குள் வடகிழக்கில் வாழ்கின்ற கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினை வளப்படுத்தலாம் என்று நம்புகின்றேன்.
இதற்கு கடற்தொழிலாளர்களும் ஒத்துழைக்கவேண்டும். இலங்கை கடல் இலங்கை மக்களுக்கு சொந்தம் ஒருவரின் தொழில் இன்னொருவரை பாதிக்காத வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும்,அத்துமீறல் சட்டவிரோத தொழில்களுக்கும் இடம்கொடுக்கமுடியாது.
இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்பு நிறுத்தப்படும் இந்திய மீனவர்களின் பேச்சு வார்த்தை வருவது போவதாக உள்ளது தீர்வு என்று எதுவும் இல்லாவிட்டாலும் இந்திய மீனவர்களின் வருகை நிதந்தரமாக காணப்படுவதாக கடற்தொழிலாளர்கள் என்னிடம் முறையிட்டுள்ளார்கள் இதனை தீர்த்து தராவிட்டால் ஆர்ப்பாட்டம்,தொழில்முடக்கம், அமைச்சரின் வடமாகாண நடமாட்டத்தினை முடக்குவோம் என்று சொல்லிக்கொண்டு இருக்கின்றார்கள்.
நான் பொறுமை பொறுமை என்று சொல்லிக் கொண்டிருக்கின்றோன் இருந்தாலும் அது நியாயமான கோரிக்கை இதனை நான் விரைவில் தீர்க்க முற்படுவேன் பத்தாயிரம் கடற்தொழிலாளர்களுடன் இந்தியாவிற்கு போய் அங்குள்ள கடற்தொழிலாளர்களுடனும் ஆட்சியாளர்களுடனும் கதைப்பதாக நான் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் சொல்லியிருந்தேன் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணாவிட்டால் இங்கிருந்து கதைப்பதை விட பத்தாயிரம் வடமாகாண கடற்தொழிலாளர்களுடன் இந்தியாவிற்கு படகில் சென்று அந்த பிரச்சனையினை தீர்ப்பதற்கு யோசித்துக்கொண்டிருக்கின்றேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முல்லைத்தீவு கொக்குளாய் கடல்நீர் ஏரியில் புல்மோட்டை மீனவர்கள் தொடர்ச்சியாக சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவருடன் சட்டத்திற்கு புறம்பான இயந்திர படகுகளையும் பாவித்து வருகின்றார்கள் இவர்களை பிடிப்பதற்காக கடந்த வாரத்தில் கடற்தொழில் நீரியல்வளத்திணைக்களம் பிரதேச சங்கங்க பிரதிநிநிதிகளுடன் சிறப்பு அதிரடிப்படையினரும் சென்றபோது இரண்டு படகுகளும் நூற்றுக்கு மேற்பட்ட தடைசெய்யப்பட்ட கூடுகளும் பிடிக்கப்பட்டுள்ளன.
ஒரு படகு தப்பி ஓடிவிட்ட நிலையில் புல்மோட்டை மீனவர்கள் குழப்பத்தினை ஏற்படுத்தி சிறப்பு அதிரடிப்படையினர்தான் தங்களை காப்பாற்றி கடலில் இருந்து வெளியேற்றியுள்ளனர் என முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரி அமைச்சரிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.








Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam
