பெண்கள் சமூகமும் தலை நிமிரும் காலத்தை உருவாக்குவோம்! - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
எமது உரிமைப் போராட்ட காலகட்டங்களிலும் சரி அதன் பின்னரான ஜனநாயக அரசியலிலும் சரி நான் பெண்களுக்கான உரிமையை ஆண்களுக்கு சரிநிகராகவும் சில சமயங்களில் அதற்கு சற்று அதிகமாகவும் கொடுத்து வந்திருக்கின்றேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துளா்ளார்.
இன்று பருத்தித்துறை மெதடிஸ்த மகளிர் உயர்தரப் பாடசாலையை தேசிய பாடசாலையாக மாற்றும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இன்று உலக மகளிர் தினமாகும். இந்த பெருமை மிக்க நாளில் பெண்களின் தனித்தவத்தை அடையாளப்படுத்தும் வகையில் இந்தப் பாடசாலை தரமுயர்த்தப்பட்டுள்ளது.
இதற்காக தன்னை துறைசார் அமைச்சர் அழைத்து இந்த தேசிய திட்டத்தை எங்கிருந்து ஆரம்பிப்போம் என கேட்டிருந்தார். அதற்கு நான் எமது யாழ் மாவட்டத்தின் இந்த பாடசாலையை முன்மொழிந்திருந்தேன். அதனடிப்படையில் இன்று அந்த பாடசாலை மாணவர்களினதும் கல்விச் சமூகத்தினதும் கனவு நனவாக்கப்பட்டுள்ளது.
ஆயுதப் போராட்ட களமுனையில் முதல் வீரகாவியமான பெண்ணாகவும் எனது சகோதரியான மதிவதனி என்னும் இயற்பெயர் கொண்ட சோபா வரலாற்றில் பதிவாகியுள்ளார். அதுமட்டுமல்லாது எனக்கும் கட்சிக்கும் மிக நெருக்கமான மனித உரிமை சட்டத்தரணியுயான மகேஸ்வரி வேலாயுதம் உள்ளிட்ட ஏராளமானவர்களையும் வன்முறையாளர்களினால் இழந்திருக்கின்றேன்.
ஆனபடியால் எனக்கு இந்த போராட்டத்தின் வலிகள் நன்கு தெரியும். அதனால்தான் இந்த போராட்டத்தின் அழிவுகளுக்கும் இழப்புகளுக்கும் நானும் ஏதோ ஒரு வகையில் பொறுப்புக்கூற வேண்டும் என்றதனடிப்படையில் அதற்கான தார்மீக பொறுப்பேற்று எமது மக்களின் மீள் எழுச்சிக்கு என்னாலான சேவைகளை தொடர்ந்து செய்துவருகின்றேன்.
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்பதே எனது நிலைப்பாடு. அந்தவகையில் இனியாவது எமது மக்கள் சரியானது எது சரியாவனவர்கள் யார், என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். அந்தவகையில் இது பெண்களுக்கான தனித்துவத்தை அடையாளப்படுத்தும் கல்லூரி என்பது மட்டுமல்லாது பெண்கள் சமூகமும் தலை நிமிரும் காலத்தையும் நாம் உருவாக்குவோம்.
என்று தெரிவித்திருந்ததுடன் தேசிய பாடசாலையாக தரமுயர்ந்துள்ள மெதடிஸ்த மகளிர்
உயர்தரப் பாடசாலையின் கல்விச் சமூகத்துக்கு எனது பாராட்டுக்களையும்
தெரிவித்த்துக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.





ரோபோ ஷங்கர் மறைவு மேடையில் எமோஷ்னலாக பேசிய அவரது மனைவி மற்றும் மகள்.. கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam
