நீரில் விழுந்து உயிருக்கு போராடிய சிறுத்தை உயிருடன் மீட்பு
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆக்ரா கற்பாறை பள்ளத்தில் நீர் தேங்கியிருந்த பகுதியில் விழுந்து உயிருக்கு போராடிய சிறுத்தையை (20) நேற்று நுவரெலியா வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர்.
நீர் தேங்கிய பகுதியில் விழுந்து உயிருக்கு போராடிய சிறுத்தையை கவனித்து பொதுமக்கள் அக்கரப்பத்தனை பொலிஸார் மூலம் நுவரெலியா வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
மீட்பு பணி
பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் கற்பாறை நீர் தேக்கத்தில் கீழ் சிக்கி உயிருக்கு போராடிய சிறுத்தையை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமாா் 3 மணி நேர போராட்டத்துக்குப் பின்னா் சிறுத்தையை உயிருடன் பாதுகாப்பாக வலையில் போட்டு மீட்டனர்.

சம்பவ இடத்திற்கு வருகைத்தந்த ரந்தெனிகல மிருக வைத்தியசாலை வைத்தியர் ஒருவர் வைத்திய பரிசோதனை மேற்கொண்டு சிறுத்தையின் பின் கால் மற்றும் வயிற்று பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்த நிலையில் சிகிச்சைக்காக உடவலவ தேசிய மிருக வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்தனர்.
எவ்வாறாயினும் சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் வனப்பகுதியில் விடுவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த சில நாட்களாக தொடர்ந்து சிறுத்தைகளின் நடமாட்டம் இப்பகுதியில் அதிகரித்து உள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.





ரோஹினியை பழிவாங்க படிச்ச அறிவாளி மனோஜ் போட்ட பிளான், சிக்குவாரா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan