ராஜஸ்தானில் கடைக்குள் புகுந்து ஊழியரைத் தாக்கிய சிறுத்தையால் பரபரப்பு
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள வணிகக் கடை ஒன்றுக்குள் திடீரென புகுந்த சிறுத்தை ஒன்று, அங்கிருந்த ஊழியரைத் தாக்கி பெரும் பரபரப்பையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் திடுக்கிடும் சம்பவம் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கெமராவில் (CCTV) பதிவாகி வைரலாகி வருகிறது.
பெரும் பரபரப்பு
திடீரென கடைக்குள் பாய்ந்த சிறுத்தையைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர் அதனிடமிருந்து தப்பிக்க முயன்றபோதும், அது அவரைத் தாக்கியது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்கள் பீதியடைந்து ஓட்டம் பிடித்த நிலையில், வனத்துறையினருக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் மற்றும் மீட்புக் குழுவினர், கடைக்குள் சிக்கியிருந்த சிறுத்தையைத் திறம்படப் போராடிப் பொறிவைத்து அடைத்தனர்.
#WATCH : A leopard entered a liquor shop in Rajasthan's Tonk district after attacking three people. The salesman managed to lock the animal inside the shop, allowing Forest Department officials to safely rescue it after a five-hour operation.#Rajasthan #Tonk #Leopard #Wildlife… pic.twitter.com/jdcWumQISd
— upuknews (@upuknews1) July 20, 2026
பின்னர், மயக்க ஊசி செலுத்தி அதை பாதுகாப்பாக மீட்டு, மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்குக் கொண்டு சென்று விடுவித்தனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.