இஸ்ரோவுக்கு உயரிய விருது: சந்திரயான் - 3 விண்கலத்திற்கு கிடைத்த அங்கீகாரம்
நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி ஆராய்ச்சிகளை மேற்கொண்ட சந்திரயான் -3 விண்கலத்திற்கு “2023-லீப் எரிக்சன் லூனார்” என்ற உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.
சந்திரயான் 3 விண்கலத்தின் வெற்றிக்காக ஐஸ்லாந்தின் ஹூசாவிக் நகர ஆய்வு அருங்காட்சியகம் இஸ்ரோ நிறுவனத்தைக் கௌரவித்து குறித்த விருதை வழங்கியுள்ளது.
கடந்த ஜூலை மாதம் 14ஆம் திகதி அன்று உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து சந்திரயான் -3 விண்கலம் ஏவப்பட்டது.
லீப் எரிக்சன் லூனார் விருது
இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் ஆகஸ்ட் 23ஆம் திகதி நிலவின் தென் பகுதியில் தரையிறங்கி தமது ஆராய்ச்சிகளை ஆரம்பித்திருந்தது.
இந்நிலையில், இஸ்ரோ நிறுவனத்தை கவுரவிக்கும் முகமாக 2023-லீப் எரிக்சன் லூனார் விருது வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி விருதினை இஸ்ரோ சார்பில் ஐஸ்லாந்துக்கான இந்திய தூதர் ஷியாம் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.