தேசிய இன விகிதாசார அடிப்படையில் காணிகள் பிரிக்கப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை – சாணக்கியன் எச்சரிக்கை
தேசிய மகாவலி சட்டத்தின் கீழ் காணிகள் தேசிய இன விகிதாசார அடிப்படையில் பிரிக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) விசேட ஒழுங்குப்பிரச்சினையினை எழுப்பி கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர்,
“தேசிய மகாவலி சட்டத்தின் கீழ் காணிகள் தேசிய இன விகிதாசார அடிப்படையில் பிரிக்கப்பட வேண்டும். ஆனால் 94 சதவீதமான காணிகள் பெரும்பான்மையினருக்கு பிரிக்கப்பட்டுள்ள நிலையில் மிகுதிக் காணிகள் சிறுபான்மை மக்களுக்கு பிரிக்கப்பட வேண்டும்.
சட்ட நடவடிக்கை
மிகுதிக் காணிகள் பகிரப்படாவிடின் இதற்கு எதிரான சட்ட நடவடிக்கையை நாம் முன்னெடுப்போம். அல்லது இது குறித்து உங்களுடன் பேசுவதற்கும் நாம் தயாராகவே உள்ளோம்.“ எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரினை கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் சந்தித்து பேசியிருந்தார்.
இந்த நிலையில் தேசிய மகாவலி சட்டத்தின் கீழ் காணிகளை பிரிக்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இது தொடர்பில் அடுத்த வாரம் கூட்டம் ஒன்றும் நடைபெறவுள்ளதுடன், அதன்
பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan

WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு News Lankasri
