காதல் திருமணம் செய்துக் கொண்ட இலங்கை பெண்ணுக்கு ஏற்பட்ட சிக்கல்.. நீதிமன்றின் நெகிழ்ச்சி தீர்ப்பு
இலங்கையைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்ணான பவித்ரா கீத்தீஸ்வரன் என்பவரை இந்தியாவில் இருந்து நாடு கடத்தும் முடிவுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைத் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.
திருச்சி மாவட்டம் லால்குடியைச் சேர்ந்த அருண்குமார் என்பவரை பவித்ரா காதலித்து கடந்த ஜூன் 4ஆம் திகதி திருமணம் செய்து கொண்டுள்ளார்.
சுற்றுலா விசாவில் இந்தியா சென்ற அந்த பெண்ணின் விசா காலம் முடிந்ததால், அவரை நாடு கடத்த அயல்நாட்டவருக்கான மண்டல பதிவுத்துறை முயற்சித்துள்ளது.
இதனை எதிர்த்து, சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் தங்கள் திருமணத்தைப் பதிவு செய்து விசாவை நீட்டிக்கக் கோரி பவித்ரா மனு தாக்கல் செய்துள்ளார்.
60 நாட்கள் அவகாசம்
இவர்களின் திருமணம் சட்டரீதியாக முழுமையாக அங்கீகரிக்கப்பட்ட வடிவத்தில் இல்லாவிட்டாலும், மனுதாரர் கர்ப்பமாக இருப்பதையும் தம்பதியின் ஏழ்மை நிலையையும் கருத்தில் கொண்டு நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்:

அதன்படி, தம்பதியினர் இந்திய சட்டங்களுக்கு உட்பட்டு 60 நாட்களுக்குள் தங்கள் திருமணத்தைச் சட்டப்பூர்வமாகப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
அதுவரை பவித்ராவை நாட்டை விட்டு வெளியேற்றக் கூடாது.
கர்ப்பிணியான பவித்ராவுக்குத் தேவையான அனைத்து அரசு மருத்துவ உதவிகளையும் வழங்க லால்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சட்டப்பூர்வ சிக்கலை விட மனிதநேயத்திற்கும் பிறக்கவுள்ள குழந்தையின் நலனுக்கும் முன்னுரிமை அளித்து நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan