டிக்கோயா நகர சபைத் தவிசாளர் வீட்டிற்கு முன்பாக போராட்டம்: சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை!
ஹட்டன் – டிக்கோயா நகர சபை சந்தை வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த அனுமதியற்ற கட்டுமானங்களை அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதை தொடர்ந்து நகர சபைத் தலைவரின் வீட்டிற்கு அருகில் அமைதியற்ற சூழல் உருவானது.
இந்தப் பிரச்சினையை வீட்டிற்கு முன்பாக நின்று தீர்த்துக்கொள்ள முடியாது எனத் தெரிவித்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நகர சபையுடன் கலந்துரையாடி சட்டரீதியாகப் பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறும் பொலிஸார் அறிவுறத்தினர்.
அத்தோடு, சட்டவிரோதக் கூட்டமாகத் திரண்டிருப்பதாகக் குற்றச்சாட்டுக்கு உள்ளாகாமல் அங்கிருந்து கலைந்து செல்லுமாறும் பொலிஸார் எச்சரித்தனர்.
வர்த்தக நடவடிக்கை
இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தப் பிரச்சினையை நகர சபையுடன் கலந்துரையாடித் தீர்த்துக்கொள்ள வேண்டுமே தவிர தனது வீட்டிற்கு வந்து தீர்வு காண முடியாது என்றுஹட்டன் – டிக்கோயா நகர சபைத் தலைவர் அசோக கருணாரத்ன சுட்டிக்காட்டினார்.

மேலும், தனது வீட்டிற்கு முன்பாக வந்து எதிர்ப்பில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், அனுமதியற்ற வர்த்தக நிலையங்கள் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் சட்டரீதியாகத் தங்களது வர்த்தக நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு பொருத்தமான இடமொன்றை ஏற்படுத்திக் கொடுக்க நகர சபை தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் மிஷ்கின் என்னை தவறாக தொட்டாரா?... சர்ச்சைக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் விளக்கம் Cineulagam