உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகளை அறிவதில் ஊடகங்களுக்கு ஏற்படவுள்ள சிக்கல்!
ஊடக நிறுவனங்களுக்கு உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகளை வெளியிடுவதா இல்லையா என்பதை தீர்மானிக்க கால அவகாசம் உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜனாதிபதி தேர்தல்
ஜனாதிபதி தேர்தல் தொடர்பான ஊடக வழிகாட்டல்களை (விதிகளை) பின்பற்றாத ஊடக நிறுவனங்களுக்கே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (12) நடைபெற்ற விசேட மாநாட்டில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில், ஊடக அமைச்சின் செயலாளர், அரசாங்கத் தகவல் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவொன்று, அனைத்து ஊடக நிறுவனங்களும் ஜனாதிபதி வேட்பாளர்களுக்காக தமது பிரதான செய்தி ஒளிபரப்புகளுக்கு ஒதுக்கும் நேரம் குறித்து தினமும் விசாரிக்கும்.
கவனிப்பு நடவடிக்கை
தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களுக்கு எதிராக ஒரு ஊடக நிறுவனம் செயல்பட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கு முன் பல நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
ஆணைக்குழுவினால் நடத்தப்படும் ஊடகவியலாளர் மாநாடுகளில் இருந்து அவர்களை நீக்குதல், தகவல்களை வழங்காமை, அவர்களின் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்காமை போன்ற நடவடிக்கைகளை பின்பற்ற முடியும்.
மேலும் செய்தித்தாள்கள் சமூக ஊடகங்கள் உள்ளிட்ட அனைத்து ஊடகங்களும் செயல்படுவதை தேர்தல் ஆணையம் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.





Ethirneechal: அறிவுக்கரசியை சின்னாபின்னமாக்கிய தர்ஷினி! ஈஸ்வரியின் போனை கைப்பற்றிய மருமகள்கள் Manithan

உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri

விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri

மறைந்த தொகுப்பாளர் ஆனந்த கண்ணனுக்காக சூப்பர் சிங்கர் மேடையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்... வீடியோ இதோ Cineulagam
